நாடாளுமன்றத் தேர்தல்; புதுவையில் பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதி - புதிய தலைவர் உறுதிமொழி

புதுச்சேரியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார்.

nda alliance candidate will win parliament election in puducherry constituency says state president selvaganapathy vel

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து 7 அரை ஆண்டு காலம் மாநிலத் தலைவராக இருந்த நிலையில் தற்போது பாஜக மாநிலத் தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1979ம் ஆண்டு முதல் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த செல்வகணபதி, கடந்த 2017ம் ஆண்டு பாஜக சார்பில் நியமன சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் பொருளாளராக இருந்த அவர் கடந்த செப்டம்பர் 25ம் தேதி பாஜகவின் முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டணி விவகாரத்தில் கருத்து தெரிவிக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது - வானதி சீனிவாசன்

இந்நிலையில் இன்று மாநிலத் தலைவராக கட்சி தலைமை அறிவித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவராக செல்வகணபதி எம்.பி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அவருக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினராக 2021ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 25ஆம் தேதியான அதே நாளில் மாநிலத் தலைவராக செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு விவகாரம்; ஒற்றை வரியில் பதில் அளித்த அண்ணாமலை

புதுச்சேரியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் அல்லது பாஜக சார்பில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள  செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios