தஞ்சாவூரில் வருடா வருடம் பொங்கல் விழாவை நடத்தி வருகிறார் அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன்.

மாட்டு பொங்கல் தினத்தன்று நடைபெற்ற முதல் நாள் விழாவில் அவரது மைத்துனர் திவாகரன் பொங்கு பொங்கு என்று பொங்கி விட்டார்.

அதை பார்த்த கிருஷ்ணகிரி முனுசாமி திவாகரனையும் நடராஜனையும் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார்.

அதாவது 'அதிமுக என்ன அவர்களின் குடும்ப கட்சியா? எம்ஜிஆர் காலத்தில் அவர்கள் அதிமுகவை மீட்டார்கள் என்பது கண்டனத்திற்குரியது' என்றெல்லாம் போட்டு தள்ளிவிட்டார்.

மைத்துனரை சாடியவரை சும்மா விட்டு விடுவாரா மாமா நடராஜன்.

தன் பங்குக்கு காணும் பொங்கலன்று இரண்டாவது நாளை நடைபெற்ற விழாவில் மைக் பிடித்த ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அனல் கக்கி விட்டார் நடராஜன்.

அரசியல் எதிரிகளின் கண்டங்களை தூள் தூளாக்கும் விதமாக 'ஆம் நாங்கள் குடும்ப அரசியல் தான் செய்வோம்' என்று அதிரடியாக ஒரே போடாக போட்டார். மேலும் உச்சகட்டமாக பாஜகவை நேரடியாக வம்புக்கு இழுத்தார்.

நடைபெறும் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் பாஜகதான் என்றும் ஒரு கை பார்த்து விடுவோம் என்றும் சவால் விட்டார்.

மேலும் இந்த குழப்பங்களை ஏற்படுத்துவது ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற சில பிராமணர்கள் தான் என கடுமையாக சாடினார்.

நான் அனைத்து பிராமணர்களையும் குறிப்பிடவில்லை. அவரை போன்ற சிலர்தான் தங்கள் குடும்பத்துக்கு எதிராக சதி செய்வதாக தேர்தார் .

குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் அரசியல் செய்யும்போது எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் செய்யக்கூடாதா?

குருமூர்த்திக்கு எம்.நடராஜன் நேரடியாக சவால் விட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.