natarajan spoke to his close friends about ops

இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம்; எங்களுக்கு ஒரு தலையணைதான் ஓபிஎஸ் என்று நடராஜன் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசியதாக அகில இந்திய முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பேசினார்.

ஜெயலலிதாவின் மறைவில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்து வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், மாநிலம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சென்னையில் நடக்கும் உண்ணாவிரத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார்

அவர் பேசும்போது, "சசிகலாவின் கணவர் நடராஜன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

அப்போது, தனக்கு மிக நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் நடராஜன் பேசும்போது 'இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சி.எம்' என்று கூறியுள்ளார்.

மேலும் நடராஜன், 'எங்களுக்கு பணமெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. நாங்கள் நினைத்தால் இப்போதே சிஎம் ஆகிவிடுவோம். எங்களுக்கு ஒரு தலையணை இருந்தால்போதும்.. அதுதான் ஓபிஎஸ் என்று பேசியதாக சேதுராமன் கூறினார்.

உண்ணாவிரத மேடையில் சேதுராமனின் இந்த பேச்சு பபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.