ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஐதரபாத்திற்கு வந்தடைந்தார். அவரை, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தெலங்கானா அமைச்சர்கள் வரவேற்றனர். 

ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஐதரபாத்திற்கு வந்தடைந்தார். அவரை, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தெலங்கானா அமைச்சர்கள் வரவேற்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். 

தேசிய அளவிலான பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்கின்றனர். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார். 

பாஜக தேசிய செயற்குழு கூட்டம்.. பிரதமர் மோடி தலைமையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.!!

அவரை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். ஐதராபாத் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.