பாகிஸ்தானுக்கு சென்று வந்ததை அடுத்து இந்தியா வந்த சவுதி இளவரசர் சல்மானை அழைத்து வருவதில் அரசின் நடைமுறைகளை ஒதுக்கி வைத்து விட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு போட்டியாக விமான நிலையத்திற்கே சென்று அழைத்து வந்துள்ளார் மோடி. 

பாகிஸ்தானுக்கு சென்று வந்ததை அடுத்து இந்தியா வந்த சவுதி இளவரசர் சல்மானை அழைத்து வருவதில் அரசின் நடைமுறைகளை ஒதுக்கி வைத்து விட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு போட்டியாக விமான நிலையத்திற்கே சென்று அழைத்து வந்துள்ளார் மோடி. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 49 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருன்கின்றன. ஆனால், இந்தியா பதிலடி கொடுத்தால் பதில் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறி வருவதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

புல்வாமா தாக்குதல் நடந்த சில தினங்களில் சவுதி இளவரசர் சல்மான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தானில் வழக்கமாக நடைபெறும் விதிமுறைகளை மீறி சல்மானை அவர் வந்திறங்கிய விமான நிலையத்திற்கே சென்று தான் பயன்படுத்தும் சொந்தக் காரை தானே ஓட்டி அழைத்து வந்தார் இம்ரான்கான்.

இந்நிலையில் பாகிஸ்தான் சென்றதை அடுத்து சவுதி இளவரசர் சல்மான் நேற்று இந்தியாவுக்கு வந்தார். அவரை வரவேற்க டெல்லி விமான நிலையத்துக்கே நேரில் சென்று சவுதி இளவரசரை வரவேற்றார் பிரதமர் மோடி. பாகிஸ்தானை போல இந்தியாவிலும் அரசு விதிமுறைகளை ஒதுக்கி வைத்து விட்டு பிரதமர் மோடி விமான நிலையம் சென்று சவுதி இளவரசரை வரவேற்றுள்ளார்.

Scroll to load tweet…

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா - சவுதி இடையே புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. அரசு நடைமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பிரதமர் மோடி, நேரடியாக விமான நிலையம் சென்று சவுதி இளவரசரை வரவேற்றுள்ளார்’’ எனக் கூறியுள்ளார். சவுதி இளவரசரை வரவேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், இந்திய பிரதமர் மோடியும் போட்டிபோட்டு வரவேற்றதை மற்ற நாடுகள் உற்றுக் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.