இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறீங்களா? எதை சொல்றீங்க? ஸ்டாலினை கிண்டல் செய்த நாராயணன் திருப்பதி!!
நிறைய சம்பவங்களை செய்யப் போறோம் காத்திருங்கள் என்ற ஸ்டாலினின் கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பல கேள்விகளை பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அடுக்கியுள்ளார்.
நிறைய சம்பவங்களை செய்யப் போறோம் காத்திருங்கள் என்ற ஸ்டாலினின் கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பல கேள்விகளை பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அடுக்கியுள்ளார். முன்னதாக சென்னை நாள் நேற்று அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை உருவாகி நேற்றுடன் 383 ஆண்டுகள் ஆனதை அடுத்து சென்னை நாள் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் கழுத்தை அறுத்தது யார்? தொல்.திருமாவளவன் பகீர் தகவல்!!
இதுக்குறித்த அவரது முகப்புத்தக பதிவில், நேற்று மாலை பெய்த சிறு மழையால் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் நிரம்பி அவை மரணப்பள்ளங்களாக மாறி விட்ட சம்பவத்தை சொல்கிறீர்களா? நேற்று இரவு பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கிய பயங்கர சம்பவம் நடைபெற்றதை சொல்கிறீர்களா? தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளித்து கொண்டிருக்கும் கொடூர சம்பவத்தை சொல்கிறீர்களா?
இதையும் படிங்க: “இனிமே இந்த கவலையில்லை.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே துறை !”
பாதுகாப்பு விதிகளே கடைபிடிக்கப்படாமல் தோண்டிய பள்ளங்களினால் பாதசாரிகளுக்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் பயங்கர சம்பவங்களை சொல்கிறீர்களா? அல்லது அந்த பணியாளர்களால் தினந்தோறும் கழிவு நீர் குழாய்களும், மின் இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்படும் அவல சம்பவங்களை சொல்கிறீர்களா? போதும் ஐயா போதும்! நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து, மேலும் பல சம்பவங்களை சென்னையில் செய்யப்போகிறோம் என்று பயமுறுத்தாதீர்கள் ஐயா! சென்னை வாசிகளால் தாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.