சமூக நீதி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? தைரியமிருந்தால், திராணியிருந்தால்! இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி
தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்று சொல்லட்டும் அல்லது அதற்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணியை முறித்து கொள்கிறோம் என்று திமுக அறிவிக்கட்டும்.
மக்களை முட்டாள்கள் என்று எண்ணி பாராளுமன்றத்திலே சட்டமாக்கி விட்டு பின்னர் திமுகவின் தயவிற்காக கெஞ்சி கூத்தாடி கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பிற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நேற்றைய தினம், அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற கூட்டத்தில், பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும், தடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளது நகைப்புக்குரியது.
இதையும் படிங்க;- நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு வாக்களித்து சட்டமாக்க ஆதரவளித்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களை உடன் வைத்து கொண்டு இந்த 'வசனத்தை' அவர் பேசியிருப்பது அரசியலுக்காக சமூக நீதியை திமுக உள்ளிட்ட கட்சிகள் குழி தோண்டி புதைத்து கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.
தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்று சொல்லட்டும் அல்லது அதற்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணியை முறித்து கொள்கிறோம் என்று திமுக அறிவிக்கட்டும். அதை விடுத்து மக்களை முட்டாள்கள் என்று எண்ணி பாராளுமன்றத்திலே சட்டமாக்கி விட்டு பின்னர் திமுகவின் தயவிற்காக கெஞ்சி கூத்தாடி கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பிற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க;- ராகுல் விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை... வானதி சீனிவாசன் விளக்கம்!!
தீண்டாமை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறியடிக்கும் மருந்தாக இருப்பது தான் சமூக நீதி என்று முழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வேங்கை வயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த குற்றவாளிகளை இன்று வரை கைது செய்ய முடியாத நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சமூக நீதி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? தீண்டாமை குறித்தும் சமூக நீதி குறித்தும் பேசுவதற்கான தகுதியை, தார்மீக உரிமையை இழந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என நாராயணன் திருப்பதி காட்டமாக கூறியுள்ளார்.