ராகுல் விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை... வானதி சீனிவாசன் விளக்கம்!!

ராகுல் காந்தி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

bjp has nothing to do with rahul issue says vanathi srinivasan

ராகுல் காந்தி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகராட்சியை பொறுத்தவரை பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றம் உட்பட பல இடங்களில் கொடுத்து வருகிறோம். கோவையில் குடிநீர் பிரச்சனை என்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது.

இதையும் படிங்க: நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

சிறுவாணியில் நீர் குறைவாக இருந்தால் லாரிகள் மூலமாவது மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். கோடைக்காலம் தூங்கு முன்பே குடிநீர் பிரச்சனை மிகபெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. மேலும் மாநகராட்சி நிர்வாகம் அண்ணா மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்து தர வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

இதையும் படிங்க: அருணாச்சல பிரதேசத்தில் அத்துமீறும் சீனா.. ஏன் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி.? காங்கிரஸ் கேள்வி.!

மாநில அரசும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு ஏற்கனவே வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சட்டம் அதன் கடமையை செய்து வருகிறது. இதற்கு பாஜக மீது பாய்வது என்பது முறையானது அல்ல என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios