அரவக்குறிச்சியில் மண்டல கமிட்டி அமைத்த செந்தில் பாலாஜி தனக்கு நெருங்கிய அமமுகவில் இருந்தவர்களையே பொறுப்பாளராக போட்டுள்ளாராம், திமுகவினருக்கு அவர் முக்கியத்துவமே அளிப்பதில்லை என நன்னியூர் ராஜேந்திரன் கோஷ்டி கண்ணீர் வடிக்காத குறையாக புலம்புகிறார்களாம்.

அதிமுக, அமமுக, என இரண்டு கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. அதனால், இரண்டு கட்சியிலும் நடக்கும் அடுத்தடுத்த மூவ்கள் அத்தனையும் செந்தில்பாலாஜிக்கு வந்துவிடுகிறது. அரவக்குறிச்சி தொகுதியின் அமமுக  முக்கிய சிலரோடு தொடர்பில் இருந்து வருகிறாராம்.

திமுக தலைமையில் நம்பிக்கைகுரியவராக இருப்பவர், அமமுகவிலிருந்து வந்தவர்  செந்தில் பாலாஜி, இவர் கட்சியில் இணைந்த சில நாள்களிலேயே மாபெரும் கூட்டம் ஒன்றைக் கூட்டி தனது பலத்தை காட்டியதால், திமுக தலைமை கரூர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த  ராஜேந்திரனை தூக்கிவிட்டு அந்த பொறுப்பு பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் தற்போது அரவக்குறிச்சி தொகுதியை செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டதால், அங்கு  ராஜேந்திரன் கோஷ்டி ஒத்துழைப்பு அளிப்பதில்லை இதனால் கடந்த சில நாட்களாக என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருந்த செந்தில்பாலாஜி சென்னையில் உள்ள திமுக நண்பர் ஒருவரிடம் பேசியபோது,  எனக்கு இந்த பொறுப்பு கொடுத்தது ஸ்டாலின்தான். 

ஆனால், நான் என்னவோ ராஜேந்திரன் பொறுப்பை தட்டிப்பறித்தாக நினைத்து எனக்கு எதிராக  ராஜேந்திரன் ஆதரவாளர்கள் செயல்படுகின்றனர். ராஜேந்திரன் என் மீது அந்த கோபத்தில்தான் இருக்காரு, என் மீது நம்பிக்கை வைத்து தளபதி அரவக்குறிச்சியைக் கொடுத்துள்ளார். 

ஆனால், இங்கிருக்கும் திமுகவினர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. குறிப்பாக  ராஜேந்திரன் தரப்பு எந்த வேலையும் செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் எனக்கு எதிராகவும் சில இடங்களில் பேசிட்டு இருக்காங்க. இதேநிலை நீடித்தால் என்ன செய்றதுனு தெரியல என தலைமைக்கு போன் போட்டு புலம்பி வருகிறாராம்.

ஆனால் அங்கு விசாரித்தால் நிலைமையே வேறாக இருக்கிறது. அதாவது அந்த தொகுதியில் மண்டல கமிட்டி ஒன்றை அமைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் செந்தில்பாலாஜி. அந்த மண்டல கமிட்டியில் தனக்கு நெருங்கிய அமமுகவில் இருந்தவர்களையே பொறுப்பாளராக போட்டுள்ளாராம், திமுகவினருக்கு அவர் முக்கியத்துவமே அளிப்பதில்லை என  ராஜேந்திரன் கோஷ்டி கண்ணீர் வடிக்காத குறையாக புலம்புகிறார்களாம்.