அதிமுகவை மீட்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை தேர்தல்களை சந்திப்பதற்கு அரசியல் அமைப்பு தேவை என்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

தினகரன் தொடங்கிய இயக்கத்தின் பெயரில், அண்ணா மற்றும் திராவிடம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாததால், தான் அந்த இயக்கத்தில் இருக்க விரும்பவில்லை எனக்கூறி நாஞ்சில் சம்பத், தினகரன் அணியிலிருந்து விலகினார். அண்ணாவையும் திராவிடத்தையும் புறக்கணித்து பட்டப்பகலில் பச்சை படுகொலை செய்துவிட்டார் தினகரன் என கடுமையாக விமர்சித்தார் நாஞ்சில் சம்பத். தினகரனை புகழ்ந்து பேசிவந்த நாஞ்சில் சம்பத், திடீரென அவர் அணியிலிருந்து விலகியதோடு தினகரனை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.

நாஞ்சில் சம்பத்தின் விமர்சனங்களுக்கு தினகரன் பதிலளித்துவிட்டார். அம்மா என்ற பெயருக்கு உள்ளே அண்ணாவும் திராவிடமும் அடங்கிவிட்டதாகவும் தங்கள் அணியை விட்டு ஒதுங்க இதுவரை காரணம் தேடிவந்த நாஞ்சில் சம்பத், இயக்கத்தின் பெயரை காரணம் காட்டி விலகியுள்ளதாகவும் தினகரன் விளக்கமளித்தார்.

நாஞ்சில் சம்பத் விலகியது தொடர்பாக, தினகரன் அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி ஆகியோர் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தினகரன் அணியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை குறிப்பிட்டு வருத்தத்துடன் டுவீட் செய்துள்ளார் நாஞ்சில் சம்பத். அந்த டுவீட்டில், இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் தினகரனுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன். அநியாயமாக  அவர் பழி வாங்கப்பட்டபோது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் @TTVDhinakaran அவர்களுக்கு துணை நின்றேன் , தோள் கொடுத்தேன் , அநியாயமாக  அவர் பழி வாங்கப்பட்டப்  பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன். (1/2) #AmmaMakkalMunnetraKazhagam
— Nanjil Sampath (@NanjilPSampath) March 18, 2018

அவரை சிகரத்திற்குக் கொண்டுசெல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை. அதனால்தான் கவலையோடு வெளியேறினேன் என நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்.(2/2) #TnPolitics #TTVDhinakaran
— Nanjil Sampath (@NanjilPSampath) March 18, 2018