சசிகலாவை சந்தித்த பின்னர் பேட்டி அளித்த நஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் , அப்போது அவர் கூறியதாவது.
கே: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே.சசிகலாவை ஏற்றுகொள்ள முடியாது என்று நான்கு நாட்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் இன்று சந்தித்துள்ளார்  நான்கு நாட்களில் ஏன் இந்த மாற்றம் ?
பொது வாழ்விலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தேன்  பொதுவாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்தேன், இது  நாடுமுழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
ரத்த சொந்தங்கள் தவித்து அனைத்து நண்பர்களும் , கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று என்னை வற்புறுத்தினார்கள்.


பேச்சும் இயக்கப்பணி கழகத்திற்கு தேவை சின்னம்மாவை சந்திக்க சொன்னார்கள் . எதைபற்றியும் தேவையில்லாமல் சின்னம்மாவை சந்தித்தேன். ரொம்ப பெருந்தன்மையாக நடந்துகொண்டார்கள் 
கே: முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் சுதந்திரமாக செயல்பட முடிந்தது  , சசிகலாவிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருந்தீர்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
பரிபூரண சுந்திரம் கிடைத்ததுன் போல் உணர்ந்தேன் , பார்த்தவுடன் வாங்க வாங்க என்று வரவேற்றார். ஒன்றுமில்லை நீங்கள் இயல்பாக பணியாற்றலாம் என்று கூறினார். 


கே: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா  பொறுப்பேற்க அவருக்கு தகுதியுண்டு ஆனால் அவருக்கு கீழ் பணியாற்ற எனக்கு தகுதி இல்லை என்று விமர்சனம் செய்திருந்தீர்கள் இப்ப சசிகலாவுக்கு அந்த தகுதி வந்துவிட்டதாக உணர்கிறீர்களா? 
அதிகாமாகவே வந்துவிட்டதாக உணர்கிறேன் , ஏனென்றால் நான் அவர்களை கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதிய பின்னனியில் அவர் என்னை ஏற்றுகொள்கிறார் என்றால் ஜனநாயக பண்பின் உச்சம் அவர்களிடத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன். 
இவ்வாறு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சசிகலாவை சந்தித்த பின்னர் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.