நடிகர் கமலஹாசனுக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது. காங்கிரஸ் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் அவருடன் கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என்று சற்று அதிகமாகவே டென்சனாகிறார் நாஞ்சில் சம்பத். 

இன்று ஆரணியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,’ வரும் பாராளுமன்ரத்தேர்தலில் தி.மு.க.கூட்டணி 40 தொகுதிகளிலுமே வெற்றிபெரும். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் உள்ளது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும். சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பெண்களே போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது. 

‘மீ டு’ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை  நான் வழிமொழிகிறேன். ‘மீ டு’வை இன்று பலர் எல்லை தாண்டி கையில் எடுப்பது வேதனையளிக்கிறது. ‘மீ டு’வை மிஸ்யூஸ் மற்றும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. கமலுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது என்பது அவர்கள் இருவரும் இணைந்தே கல்லறைக்குச்செல்வது போலாகிவிடும். கமலுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.

தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது ஒன்றே காங்கிரஸுக்கு நல்ல பலனைத்தரும். கமலுடன் கூட்டணி என்பது தற்கொலை முயற்சியே அன்றி வேறொன்றுமில்லை’ என்றார்.