Asianet News TamilAsianet News Tamil

ஆமாம் இவங்ககிட்ட யார் இத கேட்டது? வெறித்தனமா உறித்து எடுக்கும் நாஞ்சில் சம்பத்...

சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்கலந்து கொண்டு பேசிய  நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தாறுமாறாக விமர்சித்தது தள்ளினார். 

Nanjil sambath raised question against hindi
Author
Chennai, First Published Jun 20, 2019, 4:31 PM IST

சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்கலந்து கொண்டு பேசிய  நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தாறுமாறாக விமர்சித்தது தள்ளினார். 

அப்போது அவர், ஆமாம் உங்களிடம் யார் மும்மொழி கேட்டது? 400 பக்க அறிக்கைக்கு நாட்டு மக்களிடம் ஆதரவு கேட்கிறது மத்திய அரசு. கருத்து சொல்ல வேண்டும் என்கிறது.

அந்த அறிக்கை ஆங்கிலத்தில் மட்டும் இருக்கிறது. எதற்கு இப்போது மும்மொழி? உத்திரப்பிரதேசத்தில் எத்தனை மொழி படிக்கிறாங்க? மத்தியப்பிரதேசத்தில் எத்தனை மொழி படிக்கிறாங்க? ராஜஸ்தானில் எத்தனை மொழி படிக்கிறாங்க? ஒடிசாவில் எத்தனை மொழி படிக்கிறாங்க. நான் சொல்லுகிற எந்த மாநிலத்திலும் அவர்கள் படிக்கும் ஒரே மொழி ஹிந்தி மட்டும்தான். ஆனால் அங்கு இருமொழிகள் கூட அமலில் இல்லை. 

கடந்த 17ஆம் தேதி பதவியேற்கிறீர்கள். 19ஆம் தேதி ஒரு கூட்டத்தை கூட்டுகிறீர்கள். என்ன கூட்டம். ஒரே தேசம். ஒரே நாள் தேர்தல். அதற்காக ஒரு சர்வக்கட்சி கூட்டம். ஒரே தேசமா? யார் சொன்னது? நிரூபிக்க ஏனேனும் வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதா? நீங்க எண்ணிக்கையில் பெரியவராக இருக்கலாம். ஆனா நாங்க எண்ணத்தில் பெரியவர்கள் எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்துபி பேசிய அவர், 17ஆம் தேதி மோடி பதவியேற்று 19ஆம் தேதி ஒரே நாள் தேர்தல் என்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எல்லா கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்துகொள்ள நம்ம சேகுவேராவும் போகல. பிடல் காஸ்ட்ரோவும் போகல.

சேகுவேரா சார்பில், பிடல் காஸ்ட்ரோ சார்பில் ஒரு அமைச்சரும், ஒரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருக்கிறார்கள். உங்களுக்கு இங்க இடமில்லை கெட் அவுட் என சொல்லி வெளியே தூக்கி அனுப்பிவிட்டார்கள். இதற்கு பின்னால் சதி உள்ளதை உணர்ந்தீர்களா? என செம காட்டு காட்டியிருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios