அரசியல் மேடைகளில் ஓங்கி ஒலித்த, சங்க இலக்கியத்தையும் சரித்திர கதைகளையும் வரி மறக்காமல் பேசிய நாஞ்சில் சம்பத்தின் நேற்று வெளியான LKG படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.   

மதிமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் , ஜெயலலிதா மறைந்ததை அடுத்து சசிகலா பக்கம் அதாவது தினகரன் அணியில் இருந்து வந்தார். தினகரன் புதியதாக கட்சி ஆரம்பித்ததும் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லாததால் தினகரன் கட்சியில் பெறாமலேயே விலகிய நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 

வருமானம் இல்லாமல் இருந்த நேரத்தில் எல்.கே.ஜி படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்துள்ளார். இந்நிலையில், முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

இதோ,  திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறிய ராமதாஸ், இப்போது அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்;  ராமதாஸ்க்கு தேவை மகனுக்குப் பதவி, பணம். அது எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வார். அவர்களுக்குக் கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. பொதுவாழ்வில் ராமதாஸ் அளவுக்கு குட்டிக்கரணம் போட்டவர்கள் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது. மக்கள் நலன் சார்ந்து 10 கோரிக்கைகளை முன் வைத்துதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக ராமதாஸ் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படித்தான் சொல்லுவார். மகன் அன்புமணிக்கு மந்திரி பதவி வாங்கும்வரை அப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்.

கடைசியாக திமுக தலைமையிலான கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு; திமுக கூட்டணி வெற்றிப்பெற வேண்டும். வெற்றிப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களை வெற்றிப்பெற வைப்பது தமிழர்களின் கடமை என கூறியிருக்கிறார்.


 
கடைசியாக திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. வைகோவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா? எண்ணற்ற கேள்விக்கு பதிலளித்த அவர்; வாய்ப்பு அளித்தால் வைகோவுக்காக பிரச்சாரம் செய்வேன் என கூறியிருக்கிறார்.