நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசிய பேச்சுகள் சரவெடி ரகமாக இருந்தது.

இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவரது வெற்றிக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.

நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, இது நன்றி அறிவிப்பு கூட்டம் அல்ல இது மாநாடு போல் உள்ளது. 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தான் தமிழகத்தை ஆளும் என்பதை மக்கள் நிருபித்து காட்டி உள்ளார்கள். இடைத்தேர்தல் வெற்றி கூறுவது அதைத்தான். ஒரு சில காரணங்களால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை வாய்ப்பை தவறவிட்டோம். திமுக நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் இடைத்தேர்தலில் என்ன நடந்தது? திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். தொடர்ந்து 8 வருடங்களாக தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்து வருகிறது.

எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது, அதிமுக அரசையும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் சொன்னதையும்  செய்தோம் சொல்லதாதையும் செய்வோம். இது தான் அதிமுக அரசின் பாணி. கருணாநிதி இருக்கும் போதே ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை. அவர் மறைவுக்கு பின்னால் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தீராத ஆசை வந்துள்ளது,

ஆனால் முதலமைச்சர் பதவிக்கு அதாவது அதற்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார். ஆம் முதலமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் சரிபப்ட்டு வரமாட்டார் என்று இடைத்தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் இடைத்தேர்தல் முடிவுமூலம் மு.க.ஸ்டாலின் இனி எந்த காலத்திலும் அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை மக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களிலும் மிக பெரிய வெற்றி பெறுவோம். மாபெரும் வெற்றியை அளித்த நாங்குநேரி தொகுதி மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நல்ல பல திட்டங்களை உங்களுக்கு கொடுக்க உள்ளோம் அதன் மூலம்  தான் உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க முடியும் இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.