பால்வளத்துறை அமைச்சரை பபூன் என்று விமர்சித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. அதில்  " விக் வைத்த வீக்கே,  விளாங்காவெட்டி கூப்பே "    என்ற தலைப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 

இதோ பாருடா... சுடலை என்று தட்டச்சு செய்தாலே கூகுளில் இருந்து இவரது கோமாளித்தனங்கள் குறித்தான மீம்சுகள் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மீம்சுகளின் மாம்சே,  கண்டெண்ட்களின் கடவுளே,  சுதந்திர தினமும் குடியரசு தினமும் அறியாத கூமுட்டையே. யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே, சீனி சக்கர சித்தப்பா,  பூனை மேல மதில் மேல் என பல மொழிகளை கொலை செய்யும் பைத்தியமே. 

அனிதாவுக்கு சரிதா. கொள் நெல் லொள் இப்படியாக ஆரூரார்மகனின் அறிவாளி தனங்கள் தான் இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டு மக்களை சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கு என்று இருக்க, எங்கள் பால்வளத் துறை அமைச்சரைப் பார்த்து பப்பூன் என்று சொல்வதற்கு துண்டுச்சீட்டே உனக்கு வெட்கமாக இல்லையா. பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியுடன் இவரால் ஒரு பத்து நிமிடம் துண்டு சீட்டை துணைக்கு வைத்துக் கொண்டாலும் கூட ஒரு நிமிடம் உளராமல் பேச முடியுமா. 

அதனால விக்கு வைத்த வீக்கே விளாங்காவெட்டி கூப்பே, நீதான் பபூன்.  உனக்கு போட்டியாக புறப்பட்டிருக்கும் உன் மகன் உதவாத நிதி இன்னொரு கோமாளி என்றால் அது மிகையல்ல. எனவே ஊர் சிரிக்கும் கேலிப் பொருளாக இருந்து கொண்டு, பிறரை கேலி செய்யலாமா.?  என குத்தீட்டி பகுதியில் ஸ்டாலினை குத்திக் கிழித்துள்ளனர்.