சென்னை-சேலம் இடையே ரூ.10,000 கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசியல்கட்ச்சி தலைவர்களும் விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்திக்கையில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை போன்ற பெரிய பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வர வேண்டும், அப்போதுதான் நாடு முன்னேறும் என்றார்.

"உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம்" என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மா பாராட்டு தெரிவித்துள்ளது.

இதில், எட்டு வழி பசுமை சாலைத் திட்டம் நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார். மேலும் கழக அரசின் கல்விப் புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

உச்சி வெயில் அடித்தாலும் ஓங்கி மழை கொட்டினாலும் அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிதா் என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிற உள்நோக்க சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைகல்லாக நின்று உரசிப்பார்த்து வரவேற்றிருப்பது பாராட்டுக்குரியது... ஏற்கெனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும் அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட திமுக உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதுபம் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

காவிரி உரிமையை வென்றெடுத்தது, ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்று வைத்தது, ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு விடை கொடுத்தது, பிளாஸ்டிக் அரக்கனுக்கு தடை போட்டது, நீர் நிலைகளை தூர் வாரியது, நீராபானம் கொண்டு வந்தது, சட்டம் ஓழுங்கை பேணிக் காப்பதில் சமரசம் கொள்ளாமல் ரவுடிகளை வேட்டையாடி அமைதியை நிலைநாட்டுவது.... என்றெல்லாம் திடமாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடியார் அரசின் தூய்மையான தொண்டுள்ளதிற்கு இதுபோன்ற உச்ச நட்சத்திரங்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே... வரவேற்போம்... வாழ்த்துவோம்... என நமது அம்மாவில் ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் பலியாகினர். காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த பிறகு கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் கலவரத்திற்குக் காரணம் சமூக விரோதிகள் தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை அடுத்து, ”நாட்டின் முன்னேற்றத்திற்காக எட்டுவழிச் சாலைத் திட்டத்தை வரவேற்பதாகவும்,  சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை போன்ற பெரிய பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வர வேண்டும், அப்போதுதான் நாடு முன்னேறும் என கடந்த சில நாட்களாகவே தமிழக அரசுக்கு ஆதரவாகவே ரஜினிகாந்தின் கருத்துக்கள் இருந்துவரும் நிலையில், இதற்கு அமைச்சர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.