ஜெயலலிதா சிகிச்சை பெற்றதாக வெளியான வீடியோ போலியானது என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக  அல்லக்கையை வைத்து முட்டை போண்டா வெளியிட்ட வீடியோ மொத்தமும் போலி தினகரனை விமர்சித்து நமது அம்மா நாளிதழ் .

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று முன்தினம் கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்தது. ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இருந்த அறையின் தோற்றத்துக்கு ஆய்வின்போது பார்த்த அறையின் தோற்றத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தது தெரியவந்தது. 

இந்நிலையில்,ஜெயலலிதா வீடியோ  டூப்பு என  ‘அம்பலமாகும் உண்மைகள்’ என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா  தெரிவித்துள்ளது.

அதில், “ ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்ற

அல்லக்கையை வைத்து முட்டை

போண்டா வெளியிட்ட

வீடியோ மொத்தமும்

போலியாம்....

அம்மா சிகிச்சை

பெறுவது போன்ற

காட்சிகள்

அப்பல்லோவில்

எடுக்கப்பட்டதல்ல

என்னும் அதிர்ச்சி தகவல்.

விசாரணை ஆணைய

வட்டாரத்திலிருந்து

பரவுகிறது.

* அடப்பாவிகளா...

அன்று அரசு விழாவில்

அம்மா தடுமாறி

விழப்போன நிலையிலும்,

ஆம்புலன்ஸ் ஒன்றை

போயஸ் தோட்டத்தில்

நிறுத்தி வைக்காத

பொறுப்பற்ற கும்பல்.

* ஐநூறு என்னும் அளவுக்கு

சுகர் ஏறவும் ஆக்சிஜன்

அளவு நாற்பதுக்கும்

கீழே வரும் அளவுக்கு

வேடிக்கை பார்த்து விட்டு

நினைவிழந்து

மயக்கமுற்ற நிலையில்

அப்பல்லோவில்

இருந்து வந்த ஆம்புலன்சில்

ஏற்றி முதலுதவி ஏதும்

செய்யாமல்

மருத்துவமனை

முகப்பிலிருக்கும்

கண்காணிப்பு

கேமராக்களை

அகற்றுவதில் மட்டுமே

முழுக்கவனம் செலுத்தி...

* அமைச்சர்களை சந்திக்க

விடாமலும்

அடுத்த மேல் சிகிச்சைக்கு

அயல்நாடு கொண்டு

செல்ல அனுமதிக்காமலும்

ஆக்டோபஸ்

குடும்பத்தோடு

அரண் அமைத்து

கொண்டு

அம்மா உயிர் பிரியும்

வரை காத்திருந்து...

* பிறகென்ன முப்பது நாள்

முடிவதற்குள் தங்களுக்கு

முடிசூட்டு விழா நடத்த

முகூர்த்தம் குறித்தவர்கள்

அம்மா போலவே

ஆடை உடுத்தி

கொண்டைதரித்து

ஆயத்தமானவர்கள்....

ஆட்சியை பிடிக்க

* மக்கள் திலகமும்

மகராசி அம்மாவும்

கண் இமையாய்

கட்டிக்காத்த கழகத்தை

கழகத்தின் ஆட்சியை

கைப்பற்றிக் கொண்டு

மஞ்சள் குளிக்கலாம் என

மனக்கணக்கு

போட்டதெல்லாம்

மண்ணாகிப் போனாலும்.

* அடித்த பணத்தை வைத்து

அத்தனையும் பிடிப்போம்

என அகங்காரம்

கொண்டலையும் மாபியா

கும்பலின் முகமூடிகள்

ஒவ்வொன்றாய் கிழிகிறது.

அதில் போலி வீடியோவும்

ஒன்றென்பது புரிகிறது” என்று கூறப்பட்டுள்ளது.