தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் மு.கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் ராஜநாராயணனும் வேட்பாளர்களாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு பிரவீனா மதியழகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி இன்று வேட்மனு தாக்கல் செய்தார். கட்சியினரோடு மாட்டு வண்டியில் வந்த அவர், கையில் கரும்புடன் ஊர்வலமாக வந்து வேட்மனு தாக்கல் செய்தார். விரைவில் சீமான் மற்றும் முன்னணி பேச்சாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.