Nam tamilar coordinator seeman Slams
தமிழகத்தில் சரியான ஆட்சி இல்லாததே மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்த நிலையில் தங்கச்சிமடத்தில் தொடர்ந்து 4 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில் தங்கச்சிமடம் மீனவர்களின் போராட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எல்லை தாண்டுவது பிரச்சனையல்ல தமிழர்கள் என்பது தான் தாக்குதலுக்கான காரணம்.எந்த அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. தமிழகத்தில் சரியான ஆட்சி இல்லாததே மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்". இவ்வாறு அவர் கூறினார்.
