திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி திருப்பூர், நாகபட்டினம் தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அக்கட்சியின் நல்லகண்ணு திருவாரூரில் அறிவித்தார். அதன்படி திருப்பூரில் சுப்பராயனும், நாகபட்டினத்தின் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வராசும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கெனவே மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும், கோவையில் பி.ஆர்.நடராஜனும் திமுக கூட்டணி சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.