Asianet News TamilAsianet News Tamil

“அவர்களுக்கு நன்றியோ, அரசியல் நாகரீகமோ இல்லை...” சசி சகோதரர் திவாகரன் காட்டம்

Nadarajan has chance 75 ministers says Sasikalas brother Divakaran
Nadarajan has chance 75 ministers says Sasikalas brother Divakaran
Author
First Published Mar 21, 2018, 2:52 PM IST


"நடராஜனின் இறப்பு எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு, அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் எல்லோரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் , ஆனால் நடராஜனால் 75 பேர் அமைச்சராகியுள்ளனர், அவர்களுக்கு நன்றியோ, அரசியல் நாகரீகமோ கிடையாது என காட்டமாக செசினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

Nadarajan has chance 75 ministers says Sasikalas brother Divakaran

தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பதினைந்து நாள் பரோலில் வந்த சசிகலாவை பார்த்து கண்கலங்கினார். உடனிருந்த அவரது சகோதரர் திவாகரன்  நடராஜனின் உடலுக்கு மலர்வளையம் வைத்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது, நடராஜனின் உடல் அவர் விருப்பபடியே திராவிட சுயமரியாதைபடி அவரது உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படும்.

முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்பணித்தவர். அரசியல் துரோகிகள் எங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்து வந்தாலும் அதை எதிர்கொண்டு வருகிறோம்.  அதிமுகவில் பிரச்சனை உருவானபோதில் இருந்தே நடராஜன் மனதளவில் பாதிக்கப்பட்டு, உடல் நலம் குன்றிப்போனார். எம்ஜிஆர் இறப்பிற்கு பிறகு அதிமுகவை மீட்க நடராஜன் செய்த தியாகம் அரசியல் தெரிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.
Nadarajan has chance 75 ministers says Sasikalas brother Divakaran

திமுகவில் இருந்த போது இந்தி எதிர்ப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது குண்டுபட்டு இறந்தார், அடுத்த குண்டு நடராஜன் மீது படவேண்டியது  ஆனால் தப்பித்தார். 

Nadarajan has chance 75 ministers says Sasikalas brother Divakaran

அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு கலைஞரால் வளர்க்கப்பட்டவர் தான் நடராஜன், இவருக்காகவே மக்கள் தொடர்புத்துறையை உருவாக்கிக்கொடுத்தனர். எந்த பதவி மீதும் ஆசைப்படாத இவர் கிங் மேக்கராகவே இருந்தார். 

இதுவரை நடராஜனால் 75 பேர் அமைச்சராகியுள்ளனர், ஆனால் அவர்களுக்கு நன்றியோ, அரசியல் நாகரீகமோ இல்லை, அவர்கள் என்ன துரோகம் செய்தாலும் நாங்கள் நெருப்பாற்றில் நீந்தியவர்கள் மீண்டும், மீண்டும் நீந்தி மீண்டு வருவோம்" என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios