Asianet News TamilAsianet News Tamil

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி இந்தியில் எடுக்கலாம்.. ஐடியா கொடுத்த கே.என்.நேரு.! கலாய்த்த சீமான் !

Nenjuku Needhi : காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களை படிக்க வைத்தது தாத்தா காமராஜர். ஆனால் எங்களை  குடிக்க வைத்தது காங்கிரஸ். அதிகம் கல்வி பெற்ற மாநிலம் கேரளா தான். அதில் எங்கே திராவிட ஆட்சி உள்ளது.

Naam tamilar katchi Seeman trolls udhayanidhi stalin movie nenjuku needhi and rajiv Gandhi issue
Author
First Published May 22, 2022, 3:05 PM IST

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை  அலுவலகமான ராவணன் குடியில்  நாம் தமிழர் கட்சி சார்பாக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தலைமையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப்  போராட்டத்தில் உயிர் இறந்தவர்களின்  4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உயிர் இழந்தவர்களின் புகைப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்  நடத்தியவர்கள் மீது வாகனத்தில் ஏறி நின்று துப்பாக்கியால்  குறி பார்த்து சுடுவதற்கு   யார் அனுமதி கொடுத்தது. இதை பற்றி முன்னாள் முதல்வர் இடம் கேட்டும் பொழுது  அதை பற்றி தெரியாது நானே தொலைக்காட்சியில் பார்த்ததுதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகிறார். 

Naam tamilar katchi Seeman trolls udhayanidhi stalin movie nenjuku needhi and rajiv Gandhi issue

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கூட  தூத்துக்குடியில்  அனுமதி கிடைக்கவில்லை. அவர்கள் உயர் தியாகம் செய்ததை வீணாகாமல்,  அந்த ஆலை மீண்டும் திறக்காமல் இருக்க நாங்கள் போராடுவோம். ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை. நாங்கள் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறியபோது கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியதும் அதை கவனித்தார்கள் அவர்கள் கவனிக்கவே அப்படி கூறினேன். 

காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களை படிக்க வைத்தது தாத்தா காமராஜர். ஆனால் எங்களை  குடிக்க வைத்தது காங்கிரஸ். அதிகம் கல்வி பெற்ற மாநிலம் கேரளா தான்.  அதில் எங்கே திராவிட ஆட்சி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 7 பேர்  விடுதலைக்கு எடுத்து வச்ச ஒரு  நடைவடிகை காமிக்க முடியுமா ?. அண்ணாமலை மற்றும் அழகிரியை விவாதத்திற்கு என்னிடம் விவாதத்திற்கு வர சொல்லுங்கள்.

இதற்காக தான் பிஜேபி தமிழ் நாட்டுக்கு தேவை , இதற்காக தான் காங்கிரஸ் தமிழ் நாட்டுக்கு தேவை என்று சொல்ல சொல் என்றும்  காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்திற்கு எதற்கு என்று கேள்வி எழுப்பினார். உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை இந்தியில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும் என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அந்த படமே ஆர்ட்டிக்கிள் 15 என்ற இந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்பது அமைச்சர் நேருவுக்கு தெரியவில்லை. அமைச்சர்கள் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கின்றனர். 

படம் பார்த்துவிட்டு வந்தால் பிரியாணி தருகின்றனர். ஆனாலும் கூட்டம் வரவில்லை என்கின்றனர். திமுக எம்பி ஒருவர் பெரியாரை நான் பார்த்தது இல்லை; உதயநிதியை நெஞ்சுக்கு நீதி படத்தில் காக்கி உடையில் பெரியாராக பார்க்கிறேன் என்கிறார். இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை. காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்திக்கு புனிதர் பட்டம் கட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் அரசியல் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்' என்று கூறினார்.

இதையும் படிங்க : முதல்வர் மு.க ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடு எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல் !

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்துக் கணிப்பில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல் ! அப்போ இவருதானா ?

Follow Us:
Download App:
  • android
  • ios