Asianet News TamilAsianet News Tamil

சீமானின் காலைக் கவ்வும் இரண்டு கொலை பாம்பு.. நாம் தமிழர் கட்சியைச் சாய்த்து சமாதி கட்டிட நினைக்கும் வி.வி.ஐ.பி. யார்..?

தமிழ் இனத்துக்கு எதிரான சிக்கலுக்கே அந்தப் பொங்கு பொங்கும் சீமான், தன் கட்சிக்கு ‘காரியம்’ செய்திட நினைக்கும் செயல்களைப் பார்த்து கம்முன்னா இருப்பார்? வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கிறார் தன் தம்பிகளிடம். ’அசிங்கத்துக்கு மேலே அசிங்கத்தை எனக்கு உருவாக்கி, நம்ம கட்சிக்கு சமாதிகட்டிட துடிக்கிறானுங்க. அவ்வளவு ஈஸியா சாய்ச்சுட முடியுமா என்னை?’ என்று மீசையை முரட்டுத் தனமாக முறுக்கிக் கொண்டிருக்கிறார். 

Naam Tamilar Katchi party... seeman tension
Author
Tamil Nadu, First Published May 2, 2019, 3:47 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் இனத்துக்கு எதிரான சிக்கலுக்கே அந்தப் பொங்கு பொங்கும் சீமான், தன் கட்சிக்கு ‘காரியம்’ செய்திட நினைக்கும் செயல்களைப் பார்த்து கம்முன்னா இருப்பார்? வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கிறார் தன் தம்பிகளிடம். ’அசிங்கத்துக்கு மேலே அசிங்கத்தை எனக்கு உருவாக்கி, நம்ம கட்சிக்கு சமாதிகட்டிட துடிக்கிறானுங்க. அவ்வளவு ஈஸியா சாய்ச்சுட முடியுமா என்னை?’ என்று மீசையை முரட்டுத் தனமாக முறுக்கிக் கொண்டிருக்கிறார். 

காரணம்?.... சீமானின் உதவியாளரான புகழேந்தியும், நாம் தமிழகர் கட்சியில் முன்பு நிர்வாகியாக இருந்துவிட்டு பிறகு விலகிய தனசேகர் என்பவரும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் மாறி மாறி திட்டிக் கொள்ளும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலான கதை உலகத்துக்கே தெரியும். காதில் ரத்தத்தைக் கொட்ட வைத்த அந்த பேச்சு வெளியான நொடியில் இருந்தே சீமானின் நிம்மதி போய்விட்டது. எத்தனையோ வழக்குகளுக்கு அஞ்சாமல் போய்க் கொண்டிருந்தவர், இந்த தாக்குதலில் பெரிதாய் நிலை குழந்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமானவர்கள். Naam Tamilar Katchi party... seeman tension

ஆடியோவில் சீமானின் குரல் இல்லைதான், ஆனால் தனது அரசியல் மற்றும் பர்ஷனல் வாழ்க்கையை மிகவும் தனசேகர் கொச்சைப் படுத்தி விட்டதாக வருந்திக் கொட்டுகிறார் மனிதர். தன் மனைவி, குடும்பம் ஆகியவையும் இழுக்கப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த பிரச்னை போதாதென்று புதிதாக சீமான் மற்றும் அவர் கட்சியின் நிர்வாக தரப்புக்கு எதிராக பகீர் பஞ்சாயத்து ஒன்றைக் கிளப்பியுள்ளனர் சிலர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இரண்டு மர்ம மரணங்களில் சீமான் தரப்பை லிங்க் செய்து இப்போது  சர்ச்சைகள் கிளப்பி விடப்பட்டுள்ளதுதான் விவகாரமே. செல்வா பாண்டியன் மற்றும் இளங்கோ மள்ளர் எனும் இரண்டு நபர்களின் சாவுதான் அது. 

இவர்கள் இரண்டு பேருமே நாம் தமிழர் கட்சியை போல் தமிழ் தேசியம் பேசி வந்தவர்களாம். ’நடுவம்’ எனும் அமைப்பின் மூலம் தமிழ் தேசிய சிந்தனைகளை வெளிநாடு வாழ் தமிழர்களிடத்தில் கொண்டு சென்று பிரபலமாகி வந்தவர் செல்வா பாண்டியராம். அதே போல் தென் தமிழகத்தில் மிக வீரமாக தமிழ் தேசியம் பேசியபடி ‘தமிழர் தேசிய கட்சி’ எனும் அமைப்பை நடத்தி வந்தாராம் இளங்கோ மள்ளர். இவர்கள் இருவரும் கார் விபத்தில் மரணம் அடைந்திருக்கின்றனர். இந்த மரணத்தைத்தான் இப்போது ‘தங்களுக்கு எதிராக வளர்ந்து வந்ததாலும், சீமானின் பொய் முகத்தை சுட்டிக் காட்டியதாலும் நாம் தமிழர் தரப்புதான்  திட்டமிட்டு  விபத்தை நடத்தி இவர்களை கொலை செய்துவிட்டது. இப்போது என்னையும் இதே ரீதியில் கொல்லப்பார்க்கிறார்கள்.’ என்று அதே கெட்டவார்த்தை ஆடியோ புகழ் தனசேகர் சொல்லியிருக்கிறார். Naam Tamilar Katchi party... seeman tension

தனசேகரின் இந்த ‘இரண்டு கொலை’ குற்றச்சாட்டுக்களை அப்படியே போகிற போக்கில் கடந்து போக முடியாதாம். காரணம், இறந்து போன இருவரின் குடும்பங்களுமே இப்போது ‘அது விபத்து மரணமல்ல’ என்று குரல் கொடுக்க துவங்கியிருப்பதுதான். இளங்கோவின் சகோதரர் சுப்பையா “எங்களுக்கு அப்போவே சந்தேகம் இருந்துச்சு. தூக்க கலக்கத்துல காரை ரோட்டுக்கு நடுவுல உள்ள தடுப்பில் மோதி இறந்துட்டார்ன்னு போலீஸ்  சொல்லுச்சு. ஆனால், அவரோட பிரேத பரிசோதனை அறிக்கையை இப்போ வேற சில டாக்டர்களிடம் காட்டியபோது விபத்து மரணம் போல் இருந்தாலும், கூடவே சில சந்தேகங்கள் இருக்குது! தலையில் இரும்புக் கம்பியில் தாக்கியது போல் ஆழமான சிதைவு இருக்குதுன்னு குறிப்பிடப்பட்டிருக்குது. இது சந்தேக மரணம்தான்!ன்னு சொல்லுறாங்க. அதனால இளங்கோ மரணம் குறித்து மறு விசாரணை செய்ய சொல்லி நீதிமன்றத்துட்ட கோரப்போகிறோம்! என்று சொல்கிறார்கள்.Naam Tamilar Katchi party... seeman tension

இது போக, இறந்த இன்னொரு நபரான செல்வா பாண்டியரின் உறவுகளும் ‘அவரது மரணத்தை முதலில் விபத்துன்னுதான் சொன்னாங்க. ஆனால் அதுக்குப் பிறகு கிடைச்சிட்டு இருக்கிற தகவல்கள் எல்லாமே குரூரமா இருக்குது. செல்வாவை கொன்னு சாவடிச்சிருப்பாங்களோன்னு தோணுது. நாங்களும் இது சம்பந்தமா மேல் நடவடிக்கைக்கு போகலாமுன்னு இருக்கிறோம்.’ என்று குமுறியுள்ளனர். இந்த இரண்டு மர்ம மரணங்களை அடிப்படையாக வைத்துத்தான் தனக்கு சிக்கலை உருவாக்கிட பெரிய கட்சி ஒன்றின் முக்கிய அரசியல் வி.ஐ.பி. முடிவில் இருக்கிறார்! என்று சீமான் கொந்தளிக்கிறாராம். கடந்த நாடாளுமன்ற மற்றும் பதினெட்டு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தனது பேச்சுக்கள் அவரது கட்சியின் பெயரை மிகவும் சேதப்படுத்தியதால் தாலேயே இந்த பழியெடுக்கும் முடிவை அவர் துவக்குகிறார்! என்று கொந்தளித்திருக்கும் சீமான், ‘அப்படியெல்லாம் என்னை சாய்ச்சுட முடியாது.’ என்று கர்ஜித்திருக்கிறாராம். கவனிப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios