ஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என சசிகலா விடுதலைக்கு பின் ஆட்சி இருக்காது என கூறிய ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் கோசாலைக்கு சென்று பசுக்களுக்கு உணவளித்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நான் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவன் தானே. அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 

,நீட் தேர்வு தொடர்பாக ஸ்டாலின் தான் பொய் சொல்கிறார். எந்த துறைகளையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சாதனை புரிந்து பல விருதுகளை பெற்றிருக்கிறது. பெண்களை வணங்கும் தமிழகத்தில், உதயநிதி பெண்ணை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. 

அதிமுகவில் உழைப்பிற்கு மரியாதை கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. சாதாரண கிளை செயலாளராக இருந்து உழைப்பால் இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன். ஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என சசிகலா விடுதலைக்கு பின் ஆட்சி இருக்காது என கூறிய ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.