ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் கடந்த 21 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.  இதேவேளை வடமாகாணத்துக்கான ஆளுநரை நியமிப்பதில் தாமதமானது.  அவர்கள் மாகாண ஆளுநர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வட மாகாணத்துக்கான ஆளுநராக கோத்தபயவினால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு முரளிதரனுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுராக அனுராதா யஹம்பத்தவும், வட மத்திய ஆளுநராக திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.