முருகன் தமிழ்க்கடவுள், விநாயகர் யார்.? இந்து மதம் பற்றி ஆ.ராசா பேசியது தப்பே இல்ல.. பாஜகவை தெறிக்கவிட்ட சீமான்
முருகன் தமிழ் கடவுள் இங்கு விநாயகர் எங்கிருந்து வந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
முருகன் தமிழ் கடவுள் இங்கு விநாயகர் எங்கிருந்து வந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சீமானின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கி. வீரமணி பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நீ இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், நீ பார்சியாக இல்லாமல் இருந்தார், நிச்சயம் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது, இதுபோன்ற ஒரு கொடுமை வேறு எந்த நாட்டிலும் இல்லை, இந்துவாக இருக்கும் வரையில் நீ சூத்திரனாக தான் இருப்பாய், சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று அர்த்தம், இந்துவாக இருக்கும் வரை பஞ்சமன் என்று அர்த்தம், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவனாக இருப்பாய் என்பதுதான் அர்த்தம்.
ஆகவே, இதில் எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார். ஆகவே சனாதனத்தை வேறருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார். அவரின் பேச்சு பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தி உள்ளது, ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு ஆதரவு எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்து வருகிறது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆ.ராசா கூறியதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: “15 நாள் டைம்.. அதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிக்கணும், இல்ல.? அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா வார்னிங் !”
பெரம்பலூர் குன்னம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் நினைவு நாள் நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், முருகனுக்கு விழா எடுக்கும் நாம் தமிழர் கட்சி ஏன் விநாயகருக்கு விழா எடுப்பதில்லை என கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த சீமான், வரலாற்றில் முருகன் மட்டுமே இருக்கிறார், அவர் சிவன் பார்வதிக்கு மகன், முருகன் தமிழ் கடவுள், ஆனால் விநாயகர் எங்கிருந்து வந்தார்? எப்படி வந்தார் என்பதே தெரியாது எனக் கூறினார்.
அப்போது கவிஞர் வைரமுத்து குறித்து எச். ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பாரதிராஜாவின் உடை குறித்துப் பேசும் பாஜகவினர், மோடியின் உடை குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். மின் கட்டணம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, கருத்துக்கேட்பு கூட்டத்தில் சாமானிய பொதுமக்கள் எவரும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கூறவில்லை, மாறாக மின்கட்டணத்தை இந்த அரசு உயர்த்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்: 8வது நாளிலேயே ராகுலுக்கு இப்படி ஒரு நிலைமையா.? நாளை முழு ஓய்வு.. கலக்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.
அதிமுக ஆட்சியின்போது கொரோனாவை விட கொடியது மின் கட்டணம் என பேசிய ஸ்டாலின், தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். இந்துக்கள் குறித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளருக்கு கேள்விக்கு, அண்ணன் ராசா அவர்கள் கூறிய கருத்தில் பெரிய தவறு இருப்பதாக தெரியவில்லை என்றார், தமிழ் வழிபாட்டு முறையை தான் நாம் ஆதரித்து வருகிறோம், சமஸ்கிருத வழிபாட்டு முறையை தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்றார்.