Asianet News TamilAsianet News Tamil

திமுக பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை அதிகரிப்பு... அண்ணாமலை குற்றச்சாட்டு!!

திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

murders and robberies increased in tamilnadu after dmk took charge says annamalai
Author
First Published Sep 4, 2022, 9:55 PM IST

திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் எங்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பட்ட பகலில் வங்கியில் நகை  கொள்ளையடிக்கப்படுவது, வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது என திருட்டு சம்பவங்களும், அப்பாவி பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவது தமிழக மக்கள் வேதனையோடு பாதிக்கப்படுகிறார்கள். அதேபோன்று நான்கு, ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் விரட்டி கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கின்றன.

இதையும் படிங்க: ட்விட்டரில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கு.. களத்தில் காணோம் - கலாய்த்த குலாம்நபி ஆசாத்

நேற்றுக்கு முந்தினம் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொலை செய்யப்பட்டு சின்மயா நகரில் அதே அருகே கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சடலமாக மிதித்துள்ளார். பாஜகவை சேர்ந்த பாலச்சந்தர் நடுரோட்டில் வெற்றி கொல்லப்பட்டார். எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. திமுகவின் ஆதரவான தினகரனில் ஐந்தாம் பக்கத்தில் கஞ்சா போதையில் படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதியை விட்டு வெளியே சென்று குரூப் செக்ஸில் ஈடுபடுகின்றார் என்று மிகப்பெரிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரா? அவ்வப்போது அறிக்கையில் வெளியீட்டில் மட்டும் போதுமா?

இதையும் படிங்க: நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை… நிர்மலா சீதாராமனை விளாசிய கார்த்திக் சிதம்பரம்!!

முதல்வர் கஞ்சாவை ஒழிப்போம் என்று அறிக்கை விட்ட பிறகு தான் தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமானது போல் தெரிகிறது. கொலை, கொள்ளை, கஞ்சா என தமிழகம் சீர்கெட்டு வருகிறது. கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுநபர்களுக்கு குளிர் விட்டு போய்விட்டது. எதற்கெடுத்தாலும் இதுதான் திராவிட மாடல் சொல்லும் முதல்வர் அவர்கள் இதுபோன்ற சம்பவங்களுக்கு என்ன சொல்லப் போகிறார். தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி கடுமையான தண்டனையை தர வேண்டும். அதற்காக முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios