ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதற்கு பத்திரிகை செய்தியின் ஆதாரங்களை காட்டியதற்கு திகவினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர், விழா மேடையில் பேசிய அவர் 1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக ஊர்வலத்தில் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்து வந்து செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். இந்த பேரணிக்கு தந்தை பெரியால் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. பெரியால் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்துவரவில்லை என மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தவறான கருத்தை கூறியதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வீட்டை முற்றுகையிட போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த்;- நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971-ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்றார். மேலும், பத்திரிக்கை செய்திகளின் நகலையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

 

 

இதுதொடர்பாக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில்;- திரு. ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு தி.க.வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.