வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையா.? தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் ஆளுநர்களுக்கு ஏற்படும்- முரசொலி எச்சரிக்கை
வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்த நினைத்தால் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் மற்ற ஆளுநருக்கு ஏற்படும் என திமுக நாளேடு முரசொலி தெரிவித்துள்ளது.
ஆளுநர்கள் செயல்பாடு- முரசொலி கட்டுரை
திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் கொள்கை முடிவிற்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் நுழைக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்படது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தமிழக ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிலந்தி என்கிற பெயரில் கட்டுரை வெளியாகியுள்ளது அதில், ஆளுநர் தமிழிசை, கொஞ்சம் அப்பிராணி! பேட்டி தரும்போது சில செய்திகளை சூசகமாகச் சொல்ல வேண்டும் என்பதறியாமல் "படாரென போட்டு உடைத்து விடுகிறார்! தெலுங்கானாவை ஆளும் அரசு, அவருக்குக் கொடுத்து வரும் மரியாதைகளை அப்பட்டமாக செய்தியாளர்களிடம் போட்டு உடைத்து விட்டார்! தனக்கு உரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை என்பது ஆளுநரின் ஆதங்கம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் நோக்கோடு ஆளுநர் செயல்படுவதாக தெலுங்கானாவின் ஆளும் அரசு பல நேரங்களில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளது.
தமிழிசை- தெலுங்கான அரசு மோதல்
"மாநிலத்தின் உயர்ந்த பதவிக்குக் கூட நிறைய முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது' - என வாய்விட்டு அழாத குறையாக ஆளுநர் தமிழிசை பேட்டி தந்துள்ளார்!! "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த மாநிலத்து ஆளுநராகப் பதவி ஏற்றபோது இந்த மாநிலத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று உறுதி பூண்டேன். ஆனால் அதை சாத்தியமாக்க நான் எந்த முயற்சி எடுத்தாலும் அது எளிதான காரியமாக இல்லை; உதாரணமாக நான் இந்த மாநிலத்தின் பழங்குடியினர் திருவிழாவுக்குச் செல்ல எனது அலுவலகம் ஹெலிகாப்டர் கேட்டது. ஆனால் ஹெலிகாப்டர் தரப்படுமா இல்லையா என்பது பற்றி மாநில அரசு எதுவுமே கூறவில்லை" - என அங்கலாய்த் துள்ளார்! ஏன் இந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது? ஆளுநர் முற்பகல் செய்ததை பிற்பகலில் அனுபவிக்கிறார் அவ்வளவுதான்; இதில் அங்கலாய்க்க என்ன இருக்கிறது?
தெலுங்கானாவில் அமைச் சரவைக் கூட்டம் கூட்டி கவுசிக் ரெட்டி என்பவரை மேலவை உறுப்பினராக ஆளுநருக்கான "கோட்டாவில் நியமிக்க பரிந்துரை கூறியது.
மாநில அமைச்சரவை கூடி பரிந்துரைத்த அந்தக் கோப்பு ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது; அனுப்பி பல நாட்களாகியும் ஆளுநரிடமிருந்து அதற்கான எந்த பதிலும் இல்லாத நிலையில் ராஜ்பவனில் அந்தக் கோப்பு தூங்கியது! அப்போதே ஆளுநருக்கும் - அரசுக்குமிடையே அங்கு பனிப்போர் துவங்கிவிட்டது! ஒரு அமைச்சரவை முடிவுக்கு அன்று ஆளுநர் முட்டுக்கட்டை போட்டார்! இன்று அந்த முட்டுக்கட்டையை ஆளுநருக்கு அரசு போடுகிறது!
மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒழுத்துழைக்க வேண்டும்
மாநிலத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்யும் ஆளு நர்கள், அந்த மாநிலத்தின் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு ஒத்துப்போய் செயல்பட்டிருந்தால் அவர்களது அர்ப்பணிப்பு உணர்வுகள் வரவேற்று பாராட்டப்பட்டி ருக்கும்! கௌசிக் ரெட்டியை நியமிப் பதில் ஏதாவது சங்கடங்கள் இருந்தால் அதனை அரசுக்குத் தெரிவித் திருக்க வேண்டும்; அதற்கான விளக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் அன்று அரசு அனுப்பிய கோப்பு ஏற்கப்படுகிறதா இல்லையா என்ற நிலையை ஆளுநர் தமிழிசை ஏற்படுத்தியதற்குப் பதிலடியாக, ஹெலிகாப்டர் தரப்படுமா இல்லையா என்பது பற்றி தெலுங்கானா மாநில அரசு. திருமதி.தமிழிசை பாணியிலேயே எதுவும் கூறாமல் இருந்து விட்டது.குடியரசு தினத்தன்று ஆளுநர் கொடியேற்ற அனுமதிக்கப்பட வில்லை. எனது அரசுமுறைப் பயணங்க ளின் போது மரபுகள் பின்பற்றப்படவில்லை.
என்றெல்லாம் செய்தியாளர் களைக் கூட்டி புலம்பாத குறை யாகப் பேட்டி அளித்துள்ளார் திருமதி-தமிழிசை! ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை அவர் சிந்திந்திருந்திந்தால் இத்தகைய பேட்டியைத் தந்திருக்கமாட்டார். மாநிலத்துக் காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாகப் பேசும் ஆளுநர் கள்; தாங்கள் ஒன்றிய அரசின் ஆளும் கட்சியின் ஏஜண்ட் என்ற மமதையை துறந்து. மாநில நலனில் அக்கறை கொண்டு. மாநில அரசோடு இணைந்து செயல்பட்டால் இன்று ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஆளுநருக்கும் ஏற்பட்டிருக்காது என்பதை, அரசியல் சட்டம் தங்களது அதிகாரத்துக்குத் தந்துள்ள வரம்பை மீறிச் செயல் நினைத்திடும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்து ஆளுநர்களுக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு.. ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. கூட்டணி கட்சி தாக்கு
ஆளுநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த நிலையில், மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக் கும், மக்கள் நலச் சட்டங்களுக் கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டிவரும்! ஜனநாயக நாடுகளில் ஒரு மாநில அரசு என்பது அம்மாநிலத் தின் பெரும்பான்மையான மக்க ளின் ஆதரவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறி, அந்த மாநிலத்தின் பணியாற்றும் அதிகாரிகளோடு கலந்தாலோசித்து - அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நன்மைக்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்று இயற்றி அனுப்பிடும் சட்டங்களை, ஒன்றிய அரசின், ஆளுகின்ற கட்சியின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், அதுவும் அந்த மாநிலத் துக்கே தொடர்பற்ற ஒருவர் தடுத்து நிறுத்தி காலதாமதப் படுத்தி அதிலே அரசியல் செய் வதை எந்த அரசுதான் ஏற்கும்?
இரண்டு அதிகார மையங்களின் மோதலில், மக்கள் துன்பப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு, விட்டுக் கொடுத்துப் போக நினைக்கலாம்; ஆனால் மோதும் போக்கு அதிகமானால் அல்லது தொடர்ந்தால் ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படலாம்; என்பதை தன்னிலை அறியாது பேசியும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் ஆளுர்கள் உணர்ந்திடவேண்டும் என முரசோலியில் சிலந்தி எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்