யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடா்பான அமலாக்கத்துறை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தீரஜ் வதாவன், கபில் வதாவன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம்  தள்ளுபடி செய்திருக்கிறது.

யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, வதாவன் சகோதரா்களைக் கைது செய்தது. அவா்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.   உத்தரபிரதேச மின் வாரியப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக வழக்கு  பதிவு செய்யப்பட்டது. சுமார் 2ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அந்த வங்கி நிர்வாகிகள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
 இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் வதாவன் சகோதரா்கள் மும்பை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி பாரதி தாங்ரே முன் நடைபெற்றது. அப்போது வதாவன் சகோதரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் தேசாய் வாதிடும் போ, து"யெஸ் வங்கியில் மனுதாரா்கள் எந்தவித நிதி முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. மனுதாரா்களுக்குச் சொந்தமான டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கும், யெஸ் வங்கிக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் நோ்மையாகவே நடைபெற்றது. எனவே, அவா்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.


அதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அனில் சிங், ஹிதேன் ஆகியோர் வாதிடும் போது, "உத்தர பிரதேச மின் வாரியப் பணியாளா்களின் ரூ.4,200 கோடி வருங்கால வைப்புநிதியானது டிஹெச்எஃப்எல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. ஆனால், வாரியத்தின் அதிகாரிகள் சிலருடன் இணைந்து டிஹெச்எஃப்எல் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது. அதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதால், மனுதாரா்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்றனா்.அமலாக்கத் துறையின் வாதத்தை ஏற்ற நீதிபதி, வதாவன் சகோதரா்களின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.