Asianet News TamilAsianet News Tamil

பெரும் பரபரப்பு... உ.பி.,யில் செம்ம ட்விஸ்ட்... க்ளைமக்ஸில் கெத்து காட்டும் பாஜக..!

நான் எப்போதுமே பிரதமரால் ஈர்க்கப்பட்டேன். தேசம் எனக்கு முதலிடம் கொடுக்கிறது. நான் தேசத்திற்குச் சேவை செய்யப் புறப்பட்டேன்

Mulayam Singh Yadav daughter-in-law Aparna Yadav joins BJP, says was always influenced by PM
Author
Uttar Pradesh West, First Published Jan 19, 2022, 11:36 AM IST

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 கட்சியில் சேரும் போது, ​​அபர்ணா யாதவ் கூறிய காரணம், தான் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடி மூலம் செல்வாக்கு பெற்றவர் என்று கூறினார். தனக்கு வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்த அபர்ணா யாதவ், "நான் எப்போதுமே பிரதமரால் ஈர்க்கப்பட்டேன். தேசம் எனக்கு முதலிடம் கொடுக்கிறது. நான் தேசத்திற்குச் சேவை செய்யப் புறப்பட்டேன்" என்றார்.Mulayam Singh Yadav daughter-in-law Aparna Yadav joins BJP, says was always influenced by PM

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ். உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அபர்ணா யாதவ், 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில்  வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது அவர் பாஜக வேட்பாளர் ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் 33,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

 

அபர்ணா யாதவை அடுத்து முலாயம் சிங் யாதவின் மைத்துனர் பிரமோத் குப்தாவும் லக்னோவில் பாஜகவில் இணையவுள்ளார். இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிட உள்ளார். பாஜக அமைச்சர்களை அகிலேஷ் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்க, அகிலேஷின் குடும்பத்திலேயே பாஜக கை வைத்திருப்பது உத்தரப் பிரதேச தேர்தலை பரபரக்க வைத்திருக்கிறது. 

இந்தநிலையில் அபர்னா யாதவ், பாஜகவில் இணைந்தது குறித்து கூறுகையில்,  ‘’பாஜக தலைமைக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எப்போதுமே தேசம் தான் முக்கியம். பிரதமர் மோடி செய்துள்ள பணிகள் என்னை ஈர்க்கின்றன. பிரதமர் மோடியை நான் மனமார பாராட்டுகிறேன்.

நான் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் ஈர்க்கப்பட்டேன். நான் தற்போது நாட்டிற்காக சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன். பாஜகவின் திட்டங்களால் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டே வந்துள்ளேன். பாஜக வளர்ச்சிக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios