ராமர் கோயில் கட்டுவதற்கு முகலாய இளவரசர் ஒருவர் பிரதமர் மோடியிடம் தங்க  செங்கல் வழங்க உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா ஒரு மதநல்லிணக்க தேசம் என்பதை மீண்டும் இது நிரூபித்துள்ளது.  அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் சுமார் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நீண்ட நெடிய நாட்களாக உச்சநீதிமன்றத்தில் இருந்து வந்த நிலையில்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,  சுமார் 40  நாட்களுக்கும் மேலாக வழக்கை விசாரித்தனர்.

அதற்கான இறுதிக்கட்ட தீர்ப்பை நேற்று வழங்கினர்.  அதில் 2010-இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிமன்றம், தொல்லியல் துறையின் ஆதாரங்களை மேற்கோள்  காட்டியதுடன் , அயோத்தி இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவித்து.  இந்துக்கள் இங்கு ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது.  மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்ததுடன் இஸ்லாமியர்களுக்கு அதே அயோத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மாற்று இடம் வழங்கவும் உத்திரபிரதேச மாநில அரசுக்கு  உத்தரவிட்டது .  இதனையடுத்து அயோத்தியில் கோயில் கட்ட மூன்று மாதங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து முகலாய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் அபி புத்தியின்  டுக்கிகருத்து தெரிவித்துள்ளார்.  

அதில்,  அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும்.  இதன்மூலம் நாட்டின்  சகோதரத்துவத்திற்கு இது ஒரு அடையாளமாக திகழவேண்டும்.  என்று கூறியுள்ளார். அத்துடன் ராமர் கோயில் கட்ட தங்கத்திலான செங்கல்லை பிரதமர் மோடியிடம் இஸ்லாமியர்களின் சார்பில் விரைவில் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இவர் முகலாய அரச வம்சத்தின் கடைசியாக ஆண்ட பகதூர் ஷா ஜாபரின்  கடைசி வாரிசு என தெரிவிக்கப் பட்டுள்ளது.