நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் அவமதிப்பு… வெங்கடேசன் எம்.பி கண்டனம்!!
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் அவமதிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் அவமதிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில், இந்த கட்டிடம் தற்பொழுது முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024… சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த தமிழக முதல்வர்!!
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும், என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தான் இதனை திறந்து வைக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் உட்பட 19 கட்சிகள், புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடேசன், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தன்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன் - ஆளுநர் தமிழிசை
இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு. இது வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை, ஜனநாயகத்தின் சின்னம் இந்த நாடாளுமன்றம் பிரதமரே. புதிய நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத்தலைவரை அவமதிப்பதா? எல்லாம் நான்தான் என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு? இது எதிர்க்கட்சிகளின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.