உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024… சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த தமிழக முதல்வர்!!
2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலவர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற அவர், இன்று சிங்கப்பூர் நாட்டில் Temasek. Sembcorp, Ciplta.and ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் கோட் சூட் போட்டு கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்... வைரலாகும் போட்டோஸ்
அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றம் திறப்பு விழா - குடியரசு தலைவர் அவமதிப்பு; விழாவை புறக்கணிப்பதாக விசிக அறிவிப்பு
இந்த சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், எனது நீண்ட நாள் நண்பரும் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும், வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பான அமைச்சருமான எஸ்.ஈஸ்வரனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. முன்னதாக சென்னை மேயராக இருந்து, தமிழகத்தின் துணை முதல்வராக இருந்தபோது சிங்கப்பூர் சென்றிருந்தபோது நாங்கள் ஏற்கனவே சந்தித்தோம். கடந்த ஆண்டு அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையேயான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான எங்கள் யோசனைகளைப் பரிமாறிக் கொண்டோம். இன்று, எங்கள் விவாதங்கள் அர்த்தமுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக பலனளித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடுக்கு எனது அன்பான அழைப்பை விடுத்துள்ளேன். அவர் அழைப்பை மனதார ஏற்றுக்கொண்டார். நான் அவருக்கு விருந்தளிக்க காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.