MP Vasanthi Murugesan support to Edappadi Palanisamy
டிடிவி ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடிக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில் எம்.பி. வசந்தி முருகேசன் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, கடும் அதிருப்திக்கு ஆளானது டிடிவி தினகரன் தரப்பினர்.
இந்த இணைப்புக்குப் பிறகு, டிடிவி தினகரன் தனித்து விடப்பட்ட நிலையில் காணப்பட்டார். டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில், விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனிடையே டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்த ஜக்கையன் எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சென்றார்.
இந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனால் டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளானார்கள் என்றே கூற வேண்டும். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. எடப்பாடி அணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளர்.
தென்காசி தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினரான வசந்தி முருகேசன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எடப்பாடிக்கு ஆதரவு அளித்துள்ளார்.
வசந்தி முருகேசன் அணி மாறியதால் தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.
