Kalaignar Karunanidhi birthday : தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி.  

கலைஞரின் 98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘கலைஞரின் புகழ் என்றும் அழியாதது. அவரின் எழுத்து, செயல், பேச்சு ஈடு இணையற்றது. திராவிட மாடல் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது அதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். கலைஞரின் பிறந்தநாள் விழா 1000 ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும். அவரின் புகழ் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை நிலைத்துநிற்கும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : Kalaignar : ’உடன்பிறப்பே’ என்று உணர்வூட்டியவர்.. தமிழ்நாட்டின் தலைமகன் கலைஞர் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

இதையும் படிங்க : Kamal : ஒடுக்கப்பட்டோருக்கான ஒலி..முரசறைந்த கலைஞரை நினைவு கூர்வோம் - கமல் ஹாசன் ட்வீட் !