இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டர் பதிவில் அமைதி வழியில் போராடுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு கொலைகார வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மீது வன்முறையை ஏவி ..
By:T.Balamurukan
நேற்று நள்ளிரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறை போராட்டக்காரர்களை கலைந்து போகச் சொல்லியும் கூட்டம் கலைய தயாராகவில்லை. போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அந்த வாக்குவாதங்கள் தள்ளுமுள்ளில் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் போலீஸ் தடிஅடி நடத்தி தயாராகி தாக்குதலை நடத்தியது.


இந்த தாக்குதலைக்கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் விசிக தலைவர் திருமாவளவன் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டர் பதிவில் அமைதி வழியில் போராடுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை. இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு கொலைகார வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மீது வன்முறையை ஏவி ஒரு உயிரைப் பறித்த பிஜேபியின் அடிமை அதிமுக அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். அய்யோ எவ்வளவு பெரிய பொய்யை ஒரு எம்பி சொல்லுகிறார் பாருங்கள் என்று பிஜேபி தேசிய செயலர் ஹெச்.ராஜா தன் பங்கிற்கு ட்விட்டர்ல பதிவு போட்டிருக்கிறார். அதில் ‘காவல்துறை நண்பர்கள் தான் முஸ்லீம் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூசாமல் பொய் சொல்லுகிறார். சோனியா குடும்பமும். ஸ்டாலின் குடும்பமும் திட்டமிட்டு தேசத்திற்கு எதிராக தூண்டுகின்றனர் என்று பதிவிட்டிருக்கிறார்
