மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடுப்பு நடவடிக்கைகள், புள்ளி விவரங்கள் குறித்து தமிழக மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வித அறிகுறியுடன் இல்லாமலேயே 86 சதவீத பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

அதேபோல், தமிழ்நாடு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு அனைத்து துறைகளிலும் வெற்றிநடை போடும். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம். கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என்றார். கொரோனா தொற்றினை பேரிடாக அறிவித்த தமிழிக அரசு 4,333,23 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல்வரிடன் பொதுநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.378,96 கோடி வந்துள்ளது. 

சென்னையில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளையும், ஒருங்கிணைக்கும் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.