ஓ.பி.எஸின் இளைய மகன் ஓ.பி.ஜெயபிரதீப் சட்டமன்றத் தேர்தலில் போட்டுயிட 200க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு அளித்துள்ளனர். இளைய மகன் ஜெயபிரதீப் தமிழக அரசியல் ரூட்டில் தந்தையைப் போல் பயணிக்கவிருக்கிறார். அதற்கான வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். சமீபத்தில் சசிகலா உடல்நலம் பெற வாழ்த்து கூறி ஓபிஎஸ்ஸையே வாயைப் பிளக்க வைத்தார். தற்போது அவரது சார்பில் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி, கம்பம் உள்ளிட்ட தொகுதிகளில் அவருக்காக 100க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தலைமையிடம் சென்றிருக்கின்றன.

தந்தை ஓபிஎஸ் போடிநாயக்கனூரில் வெற்றிபெறுவதற்கான வேலையும் இறங்கி செய்துவருகிறார். அதற்காக அங்கிருக்கும் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். இச்சூழலில் உசிலம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இந்திய அதிமுகதான் வெற்றி பெறும். குறிப்பாக அதிமுக 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறும். கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்தால் இந்தத் தேர்தலில் முடிவெடுப்பேன்”என்று கூறினார்.