Asianet News TamilAsianet News Tamil

இன்னும் 4 நாட்களில் ஆக்சிஜன் பேருந்துகள் தயாராகும்.. கொரோனா சுனாமியில் சும்மிங்போடும் மா.சு.

மதுரை, கோவை , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மதுரை புறப்பட்டு சென்றார். 

More than 100 oxygen buses will be ready in 4 days. ma.su swimming corona tsunami.
Author
Chennai, First Published May 14, 2021, 12:44 PM IST

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தமிழகத்திற்கு கிடைத்தால் தட்டுப்பாடு இருக்காது என்றும், இன்னும் நான்கு நாட்களில் ஆக்சிஜன் பேருந்துகள் தயாராகும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

மதுரை, கோவை , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது, முதலமைச்சர் உத்தரவின்படி இன்று மதுரை நாளை கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். நேற்று முன்தினம் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி தமிழகம் வந்துள்ளது. 18-45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த  தமிழக அரசு 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தியத்தில், முதற்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசிவர வேண்டியுள்ளது. 

More than 100 oxygen buses will be ready in 4 days. ma.su swimming corona tsunami.

அதில், நேற்று 5 லட்சம் டோஸ் வந்துள்ள நிலையில்  நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்தார். ரெம்டெசிவர் மருந்து என்பது நோயாளியின் தொடக்க சிகிச்சைக்கு மட்டுமே பயன்படும் ஒரு மருந்தாகும். மத்திய அரசிடம் இருந்து 7,000 ரெம்டெசிவர் மருந்து மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது; ஆனால் தமிழகத்தின் தேவையோ 20,000 என்பதால் தான் தட்டுப்பாடு நீடிக்கிறது. தனியார் மருத்துவனையினர் ரெம்டெசிவர் தேவையென போய்யான தோற்றம் உருவாக்குவது வருத்தம் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நோயாளிகளை பரிதவிக்க மருத்துவர்கள் விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் என்பது தொடர்ச்சியாக தமிழகதிற்கு கிடைத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது.

More than 100 oxygen buses will be ready in 4 days. ma.su swimming corona tsunami.

மேலும்,100க்கும் மேற்ப்பட்ட தனியார் பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி பொருத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நியவடையும் எனவும், அதன் பின்பு மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை தவிர்க்கப்படும் என தெரிவித்தார். மோசமான சூழ்நிலையில் செல்லும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பது வரவேற்கத்தக்கது! ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு மட்டும் சிகிச்சை செய்து விட்டு கட்டமைப்பு இல்லாத தனியார் மருத்துவமணைகள் நோயாளிக்கு ஆக்சிஜன் இல்லாத போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் , தனியார் மருத்துவமனைகள் தங்கள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios