அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முரளிதர ராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்தபோது, அந்தத் துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி முரளிதர ராவின் உறவினர்களான கிருஷ்ண கிஷோர் மற்றும் ஈஸ்வர ரெட்டி ஆகியோர் ரூ.2.10 கோடி பணம் பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ண கிஷோர், முரளிதர ராவின் நிழல் போன்றவர் என்றும், அவரால் மத்திய அரசுத் துறைகளில் நியமனப் பணிகளைப் பெற்றுத்தர முடியும் என்றும் கூறி தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக சரூர் நகர் போலீசார் கூறுகையில் கிருஷ்ண கிஷோர், ஈஸ்வர ரெட்டி, முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதில், முரளிதர ராவின் பெயர் 8-வது பெயராகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. நிர்மலா சீதாராமன் கையொப்பமிடப்பட்ட பார்மா எக்சில் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக  போலியான கடிதத்தையும் காட்டினார். அப்போது நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், எங்களுக்கு பதவி கிடைக்கவில்லை, பணத்தை திருப்பிக் கேட்டபோது முரளிதர ராவ் உள்ளிட்டோர் எங்களை மிரட்டினார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்தப் புகார் குறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள முரளிதர ராவ், என் மீதான இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் எனது மரியாதை மற்றும் மதிப்பைக் குலைக்கும் வகையில் சதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக உரிய முறையில் வழக்கறிஞர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.