Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: 18 முறை சீன அதிபரை சந்தித்த மோடியின் பழக்கவழக்கம் இவ்வளவுதானா..? உதயநிதி ஸ்டாலின் ஆத்திரம்..!

 சீன அதிபரை இத்தனைமுறை சந்திக்காத, சீனா செல்லாத பிரதமர்களால் வளர்க்கப்பட்ட இருதரப்பு நல்லுறவை, பலமுறை சீனா சென்ற மோடியால் ஏன் பேணமுடியவில்லை? என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Modis habit of meeting Chinese President 18 times .. The rage of the Udayanidhi Stalin
Author
Tamil Nadu, First Published Jun 19, 2020, 1:20 PM IST

சீன அதிபரை இத்தனைமுறை சந்திக்காத, சீனா செல்லாத பிரதமர்களால் வளர்க்கப்பட்ட இருதரப்பு நல்லுறவை, பலமுறை சீனா சென்ற மோடியால் ஏன் பேணமுடியவில்லை? என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தற்சார்பு பொருளாதாரம்’ என்கிற மோடி அரசு, நம் ராணுவ வீரர்களை சீன வீரர்கள் தாக்கிய சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 13ம் தேதி அதே சீன நிறுவனத்துடன் 1700 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடுகிறது. பாஜகவினர் இப்போது, ‘சீன பொருட்களை புறக்கணியுங்கள்’ என்கின்றனர். யார் உண்மையான தேச துரோகி?Modis habit of meeting Chinese President 18 times .. The rage of the Udayanidhi Stalin

மோடி, 6 ஆண்டுகளில் சீன அதிபரை 18 முறை சந்தித்துள்ளார், 5 முறை சீனா சென்றுள்ளார். 70 ஆண்டுகளில் எந்த பிரதமரும் இத்தனைமுறை சீனா சென்றதில்லை. சீன அதிபரை இத்தனைமுறை சந்திக்காத, சீனா செல்லாத பிரதமர்களால் வளர்க்கப்பட்ட இருதரப்பு நல்லுறவை, பலமுறை சீனா சென்ற மோடியால் ஏன் பேணமுடியவில்லை?

‘சீனாவுடனான மோதலில் நம் வீரர்களிடம் ஆயுதம் இருந்தது. ஒப்பந்தத்துக்கு பணிந்து அவற்றை பயன்படுத்தவில்லை’ என்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இதுதான் ‘ராணுவ ஒழுங்கு’ இத்தியாகத்துக்கு ஈடே கிடையாது. இதையும் பாஜகவினர் தங்களின் தியாகம் போல் பேசுவது அவ்வீரர்களுக்கு செய்யும் துரோகம்.Modis habit of meeting Chinese President 18 times .. The rage of the Udayanidhi Stalin

1960க்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே நேரடி மோதல் இல்லை. 1975ல் சீன தாக்குதலுக்கு 4 இந்திய வீரர்கள் இறந்தனர். எல்லையில் சில கைகலப்புகள் நடந்திருந்தாலும் 40 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் அது உயிரிழப்புவரை சென்றுள்ளது. விலைமதிப்பற்ற நம் ராணுவ வீரர்கள் 20 பேரை இழந்துள்ளோம்.Modis habit of meeting Chinese President 18 times .. The rage of the Udayanidhi Stalin

இந்திய-சீன ராணுவ வீரர்களுக்குள் 50 நாட்களாக கைகலப்பு, சச்சரவு. ‘நம் பிரதமர் இதுபற்றி மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை’ என்றால், ‘நீ தேச துரோகி’ என்கிறது பாஜக. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தேசமே ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றுகிறது, அவர்களின் பின்னால் நிற்கிறது. பாஜகவின் பின்னாலல்ல'' என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios