லட்சக்கணக்கான தாமரைகளை பார்த்துப் பயந்து சூரியன் மறைந்துவிட்டது. உச்சி சூரியனே எங்களை ஒன்னும் செய்ய முடியாதபோது உதயசூரியன் என்ன செய்து விட முடியும்? என பிரதமர் மோடி முன் எகிறி குதித்து கர்ஜித்தார் தமிழிசை. 

மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் பிரதமர் மோடியை வரவேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தமிழகத்தில் தாமரை மலருமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். இங்கே எவ்வளவு தாமரைகள் மலர்ந்திருக்கின்றன பாருங்கள். பிரதமர் மோடி இங்கு வருகை தந்துள்ளார்.

வருகிற மக்களவை தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நமது வெற்றியை பரிசளிப்போம். பாரதம் தழைத்தோங்க "மீண்டும் மோடி; வேண்டும் மோடி" என்று முழக்கமிடுவோம். மோடி பிரதமரான பின் இந்தியாவிற்கு 10 எய்ம்ஸ் கிடைத்துள்ளது. பாஜகவின் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்கான முன்னோட்டமாக மதுரை பொதுக்கூட்டம் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதை இந்த கூட்டம் உறுதிசெய்கிறது. 

மதுரையில் தாமரைகள் மலர மலர உதயசூரியன் எங்களை என்ன செய்ய முடியும். லட்சக்கணக்கான தாமரைகளை பார்த்துப் பயந்து சூரியன் மறைந்துவிட்டது. உச்சி சூரியனே எங்களை ஒன்னும் செய்ய முடியாதபோது உதயசூரியன் என்ன செய்து விட முடியும்’’ என அவர் கர்ஜித்ததை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.