நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நாடு முழுவதும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பிஜேபி 327 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் முடிவின்படியே தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 100 க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

நாடு முழுவதும் அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கும் இந்த அதே நேரத்தில் பிஜேபி, தமிழகத்தைப் பொறுத்தவரை நிலையில் படுதோல்வியை சந்திக்கவுள்ளது. அதிலும் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை காங்கிரஸ் வேட்பாளரை விட படு மோசமான வாக்குகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டார். தென் சென்னையில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் பிண்ணாய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல பிஜேபி வேட்பாளர்களான தமிழிசை, ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் என ஒட்டுமொத்தமாக பின்னடைவில் உள்ளனர். 

ஜெயலலிதா மறைந்ததிலிருந்து அதிமுகவை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் இதுவரை தப்பித்து வந்த எடப்பாடி அரசு தேர்தல் ரிசல்ட், அதிமுக கூட்டணி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதாலும், இனி யாருடைய ஆதரவும் இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்பதால் அதிமுகவை கழட்டிவிடும் என்றே செல்லப்படுகிறது. இந்த தேர்தலோடு அதிமுக காலியாகும் என சொல்லப்பட்ட நிலையில், இனி அதிமுக தலைவர்களை மதிக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, தேர்தல் சமயத்தில் இடைத்தேர்தலில் மட்டுமே குறியாக இருந்ததாலும், லோக் சபா தொகுதிகளில் கவனம் செலுத்தாதது தேர்தல் முடிவில் தெளிவாக தெரிவதால் ஓபிஎஸ் இபிஎஸ் மீது பிஜேபி தலைமை கொல காண்டில் இருப்பதாகவே தெரிகிறது. வழக்கமாக டெல்லிக்கு சென்றால் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு ராஜ மரியாதையுடன் நடத்தி வந்த பிஜேபி, அதிமுக படுதோல்வியை சந்திக்கவுள்ளதால், கடந்த காலங்களில் கொடுத்த மரியாதை இனி கிடைக்காது. எப்போதுமே, வெள்ளையும் ஜொள்ளையுமாக டெல்லிக்கு செல்லும் அதிமுக தலைவர்களை இனி சல்லி  காசுக்கு கூட மதிக்கமாட்டார் மோடி.

இதில் கொடுமை என்னன்னா? ஓவர் பில்டப், முறுக்கல், ஓவராக பேசி பேரம் நடத்திய தேமுதிகவும் சரி, வாக்கு வங்கி அதிகமா இருக்கு என ஏமாற்றி 7 சீட் வாங்கிய பாமகவும் சரி இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.