நான் தவறு செய்திருந்தால் என் வீட்டில் ரெய்டு நடக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சித்தி என்ற பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார உரையில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநில பிரதமர் கமல்நாத் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதற்கு காங்கிரஸ் கட்சி தன் மீது குற்றம் சாட்டி வருகிறது. சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டால் அங்கு சோதனைகள் நடக்கும். என் மீது தவறு இருந்தாலும் கூட ரெய்டு வரும் என குறிப்பிட்டார்.

மேலும் டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மத்திய நேரடி வரி விதிப்பு இயக்குனரகம் நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பணத்தை கண்டுபிடித்தது. இது மோடி அரசின் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மத்திய அரசு அளிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கான சத்துணவு நலத்திட்டங்களுக்கு வழங்கும் பணத்தை இங்குள்ள மாநில அரசு சுரண்டி டெல்லி துக்ளக் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றது. இப்படி செய்பவர்கள் எல்லாம் தன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கண்டிப்பாக தொடரும். நானே தவறு செய்தால் என் வீட்டிலும் சோதனை நடத்துவார்கள் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி. இவருடைய பேச்சை கேட்டு,கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.