பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று இரவு நடைபெற இருக்கிறது. பாஜகவில் ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், அமைச்சரவையில் அமித் ஷாவை இம்முறை இடம்பெறச் செய்தால் பாஜகவுக்கு புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுக்கபட இருக்கிறார். 

மோடியை தொடர்ந்து அமைச்சர்களாக பதவியேற்கும் அவரது சகாக்களுக்கும் ராம்நாத் கோவிந்த் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். மொத்தம் 65 அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் இடம் பெறுவர் என தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கூட்டணி கட்சிகளிலும், ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவியேற்க உள்ளார். அவர் அமைச்சரவையில் இணைந்தால் ஜெபி நட்டா, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஒருவரில் தலைவராக வாய்ப்பு உள்ளது. ஆனால், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா முக்கிய மாநிலங்களில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களின் காரணமாக கட்சித் தலைவராக அமித் ஷா தொடர்ந்து இருக்க கட்சி பிரிவுகள்  விரும்புகின்றன.

மத்திய அமைச்சரவையில் அதிக மாற்றம் இருக்காது எனவும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளான அதிமுக ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம், லோக்ஜன் சக்தி - ராம் விலாஸ் பாஸ்வான், சிவசேனா - அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தளம் - ஆர்சிபி சிங், அகாலிதளம் - ஹர்சிம்ரத் பாதல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 2 கேபினட் பதவிகள் கேட்டு அமித்ஷாவிடம் வலியுறுத்தி இருக்கிறார். இதேபோல், தமிழகத்தில் அதிமுகவும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள வைத்திலிங்கம் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஓ.ரவிந்தரநாத்தே தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.