விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறேன்..! முதல் முறையாக வாக்களிக்க வரும் இளைஞர்களுக்கு வரவேற்பு...!

பிரதமர்  நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரை நிகழ்த்தினார்.அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், காங்கிரஸ் உடனான போட்டியில் மக்கள் மனதை பாஜக வெல்லும் என்ற தோணியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என தான் விருப்பம் தெரிவிக்கிறேன். எனது அரசு நேர்மையான அரசு, இளைஞர்கள் நேர்மைக்கு தான் வாக்களிப்பார்கள்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலுக்காக முதல் முறையாக  வாக்களிக்க உள்ள இளைஞர்களை வரவேற்கிறேன் என்றும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் உரை  நிகழ்த்தினார் மோடி. கடைசியாக, விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறேன், ஆனால் விமர்சனங்கள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன என ஒரு பன்ச் கொடுத்து உரையை முடித்துக்கொண்டார்.