- Home
- Politics
- ராமதாஸ், சீமான் போன்று விவசாயத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்..! நல்ல விஷயம் என மகிழும் கொங்கு மக்கள்
ராமதாஸ், சீமான் போன்று விவசாயத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்..! நல்ல விஷயம் என மகிழும் கொங்கு மக்கள்
தண்ணீரை சேமித்து வைத்து குடிக்கிறதுக்கும், விவசாயத்துக்கும் இருக்கிறது எவ்வளவு பெரிய ஒரு நல்ல விஷயம். இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் செஞ்சுட்டு கதைகள் சொன்னா பரவால்ல. எதுவுமே செய்யாம கதைகளை மட்டும் அடித்து விடுவது எப்படி?

கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியது பலராலும் பாராட்டப்படுகிறது.
பெரும்பாலும் திமுக மேடைகளில் விவசாயம் குறித்து பேசவே மாட்டார்கள். நம்மில் என்பது சதவீதம் பேரு விவசாய குடும்பங்களில் இருந்து தான் வந்திருப்போம். ஆனால் விவசாயிகளுடைய பிரச்சினை பற்றி திமுக எப்போதுமே கண்டு கொள்ளாது அதிமுக ஓரளவுக்கு செயல்பாட்டில் செய்து விடுவார்கள். தடுப்பணைகள் குறித்தும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் இயற்கையின் முக்கியத்துவம் குறித்தும் மாசுபாடு குறித்தும் அதிக அளவில் உள் மனதில் இருந்து பேசி வரும்போது அவர்கள் ராமதாஸ் மற்றும் சீமான் மட்டுமே. அந்த வகையில் விஜய்யும் பவானி கீழ் பவானி பாசனம் மற்றும் அத்திக்கடவு அவிநாசி உள்ளிட்ட விவசாய பிரச்சனைகள் குறித்து அதிக நேரம் செலவிட்டு பேசியது கொங்கு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் கொங்கு மண்டலத்தில் விவசாயம் மிகப்பெரிய வாழ்வாதாரமாகும்.
விவசாயத்தையும், ஈரோட்டின் பெருமையையும் பற்றி பேசிய விஜய், நம்ம வீட்ல கூட நம்ம அம்மா, அக்கா, தங்கைகள் நமக்காக நாம நல்லா இருக்கணும்னு மஞ்சள் புடவை கட்டிக்கிட்டுதான் வேண்டிக் கொள்வார்கள். அப்படி அந்த மஞ்சள் என்றாலே ஒரு தனி மகி்மைதான். நம்ம கொடியில் கூட அந்த மஞ்சள் பிரண்டா, அந்த எனர்ஜெடிக்கா மஞ்சள் இருக்குமே. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளைகிற பூமி தான் இந்த ஈரோடு. இங்கே வந்து மஞ்சள் பற்றி பேசாமல் வேற எங்க போய் பேசுறது? அது மட்டும் இல்ல. ஒரு மகத்தான ஒரு மனிதரைப் பற்றி நாம பேசியே ஆகணும். தந்தை பெரியார்.
இந்த ஈரோடு மண் விவசாயத்துக்கும் பேர் போன மண். இங்கு நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கியமான ஒரு கவசமாக இருக்கிறது என்ன தெரியுமா? காலிங்கராய அணை. நம் உயிரான, உணர்வான அந்த அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போது, ரொம்ப சோர்வடைந்து விட்டாராம் காலிங்கராயன். அப்ப அவங்க அம்மா அதைப் பார்த்துவிட்டு சொன்னாங்களாம் மகனே... காலிங்கராயா, தயிர் விற்ற காசு இருக்குது. அதை எடுத்துக்கொண்டு போய் அணையை கட்டிடு. கால்வாயை வெட்டுனு சொல்லி தைரியம் கொடுத்தாங்களாம். பெத்த அம்மா குடுக்குற அந்த தைரியம் இருக்கு பாருங்க அதைத்தாண்டி வேற எதுவுமே கிடையாது. எல்லாரும் எனக்கு தைரியம் கொடுத்து இருக்கீங்க. அதே தைரியத்தை கொடுத்து இருக்கீங்க. அதே துணையாக என் கூட நிக்கிறீங்க. இதை எப்படி நம்மை பிரித்து விடலாம். இதை எப்படி நம்ம கெடுக்கலாம் என அவதூறுகள் கிளப்புகிறார்கள்.
நம்ம விஜய் மேல சொல்லி மக்களை நம்ப வைக்கலாம் என நினைக்கிறார்கள். சூழ்ச்சிகள் செய்கிறார்கள். நம்ம விஜய் மேல பண்ணி மக்களை நம்ப வைக்கலாம் என இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி குழப்பம் நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டங்கள் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு தான் இருக்கு. ஆனால், அவங்களுக்கு தெரியாது. இது இன்னிக்கு நேத்து வந்த உறவு இல்லை.30, 33 வருஷத்துக்கு மேலே இருக்கிற உறவு. நான் சினிமாக்கு வந்தபோது எனக்கு வயசு 10. அப்போது இருந்து இந்த உறவு ஆரம்பம் ஆகி போய்கொண்டு இருக்கிறது. அது அவங்களுக்கு தெரியாம போச்சு, அதனால்= என்ன பண்ணாலும் நீங்க என்ன ட்ரை பண்ணாலும் எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன்.
இந்த விஜயை மக்கள் விட மாட்டாங்க. மக்கள் கூடவே நிக்கிறாங்க. கூடவே நிப்பாங்கன்னு அவங்களுக்கு தெரியாம போச்சு. இந்த சத்தம் தாங்க வாழ்நாள் பூரா கூடவே வரும். எப்போ நம்ம காலிங்கராயன் அவர்கள் அணையை கட்டுவதற்காக பவானிக்கு போய் பார்க்கும்போது ஒரு இடத்தில் ஒரு பாம்பு வந்து உட்கார்ந்துச்சாம், படுத்துச்சாம். அது படுத்த இடத்துல தான் அவர் அணையை கட்ட ஆரம்பித்தாராம். அப்புறம் என்ன? பாம்பு வளைந்து நெளிஞ்சு போற இடத்துல எல்லாம் கால்வாய் வெட்டுனாருன்னு சொல்லி சில வாய்மொழி கதைகள் எல்லாம் சொன்னாங்க.
தண்ணீரை சேமித்து வைத்து குடிக்கிறதுக்கும், விவசாயத்துக்கும் இருக்கிறது எவ்வளவு பெரிய ஒரு நல்ல விஷயம். இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் செஞ்சுட்டு கதைகள் சொன்னா பரவால்ல. எதுவுமே செய்யாம கதைகளை மட்டும் அடித்து விடுவது எப்படி? அத்திக்கடவு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தினால் அங்க மூணு மாவட்டத்தில இருக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு எவ்வளவு பிரயோஜனமா இருக்கும்? எத்தனையோ லட்சம் ஏக்கர் நிலங்கள்ல விவசாயம் நடத்தினால் எவ்வளவு பிரச்சனை தீரும். இங்க மக்கள் வாழ்வாதாரத்தில் கொஞ்சம் அக்கறை காட்டலாம்ல? ஏன் காட்ட மாட்டேங்கறீங்க? 21 ஆம் நூற்றாண்டில் மக்களைப் பற்றி எதுவுமே யோசிக்கிறது இல்ல. ஆனால், அந்த காலத்திலேயே இது எல்லாத்தையும் பத்தி யோசிச்ச மக்களை பற்றி குடிக்கிற தண்ணிய பற்றி, விவசாயத்தைப் பற்றி, அணை கட்டுறத பற்றி கால்வாய் கட்டுவதைப்பற்றி யோசிப்பது இல்லை’’ எனப்பேசினார்.
