- Home
- Politics
- பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!
இப்ப ஆட்சியில் இருக்கிறவங்க என்னவெல்லாம் செய்றாங்க. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீங்க ஐயா. தயவு செஞ்சு கொள்ளை அடிக்காதீங்க. பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கிற இவங்கதான் நம்முடைய அரசியல் எதிரி.

கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், ‘‘ஈரோட்டில் பிறந்த பெரியார்தான் இந்தியாவுக்கே இட ஒதுக்கீடு சம்பந்தமான அரசியல் சட்டத்தை திருத்துவதற்காக போராட்டம் நடத்தினார். நம் தந்தை பெரியாறு நூறு வருஷத்துக்கு முன்னாடியே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டவர். ஆன்மீகமும் சரி ஒரு ஆச்சரியத்தோடு பார்க்கக் கூடிய ஒரு மனிதர். நம்முடைய கொள்கை தலைவரே அவர். அப்ப அண்ணாவும், எம்ஜிஆரும் யார்? அவர்களிடம் இருந்து எங்களுக்கு தேவையான கொள்கைகளை எடுத்துக்கிட்டோம். அவர்களை ஃபாலோ செய்கிற வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டோம். அண்ணாவிடம் இருந்தும், எம்ஜிஆரிடம் இருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவங்களை பயன்படுத்துவது பற்றி யார் இங்கே கம்பளைண்ட் எல்லாம் பண்ண முடியாது.
அண்ணா எங்களுடையவர். எம்ஜிஆர் எங்களுடையவர். முதலில் மண்டையில் இருக்கிற கொண்டையை மறைங்க சார். சும்மா மாறு வேஷத்தில் மருவோடு சுற்றிக் கொண்டிருக்கும் ஆள் மாதிரி மாத்தி மாத்தி அனுப்பிட்டு இருக்காதீங்க. இதெல்லாம் என்ன? மக்களுக்கு தெரியாது என நினைக்கிறீர்களா? மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்காங்க. அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்க கொள்ளை அடிச்சு வச்சிருக்கிற காசு தான் துணை. ஆனால் எனக்கு என் மேல எல்லையில்லா பாசம் வைத்திருக்கிற ஈரோடு மக்களுக்காக நான் இப்போ குரல் கொடுக்கலாம் என வந்து இருக்கிறேன்.
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். அந்த செல்வாக்கையும், அந்தப் பதவிகளையும், அந்த பவரையும் வைச்சிக்கிட்டு அவர் என்ன சொன்னார் தெரியுமா? இவ்வளவு செல்வாக்கு, இவ்வளவு பதவிகள், இவ்வளவு பவர் இருந்தா நான் ஒரு அஞ்சு பைசா காசு சம்பாதித்து இருப்பேனா? எனக்கோ இல்ல, என் குடும்பத்துக்கோ பட்டங்கள் வேணும், பதவி வேண்டும். ஏதாவது கேட்டு இருப்பாரா? இல்லையென்றால் லாபம் பார்த்திருப்பாரா? நான் எதுக்காவது ஆசைப்பட்டு இருப்பனா? ஆனால் அவர் பெயரை சொல்லிக்கிட்டு, அவருடைய கொள்கையை ஃபாலோ பண்றதா சொல்லிக்கிட்டு, இப்ப ஆட்சியில் இருக்கிறவங்க என்னவெல்லாம் செய்றாங்க. அதனாலதான் சொல்றேன், பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீங்க ஐயா. தயவு செஞ்சு கொள்ளை அடிக்காதீங்க. அவர் பெயரை சொல்லிக்கிட்டு, பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கிற இவங்கதான் நம்முடைய அரசியல் எதிரி.
மக்களே நீங்க சொல்லுங்க. நம்மளுடைய அரசியல் எதிரி யார்? நம்முடைய கொள்கை எதிரி யார்? நம்மளுடைய அரசியல் எதிர் யார்? நம்மளுடைய கொள்கை எதிரி யார்? உங்களுக்கு புரியுதுல்ல. எனக்கு அது போதும். எனக்கு வேற எதுவுமே தேவையில்லை. அதனாலதான் உங்களுக்கு நம்மள பத்தி, நம்ம அரசியலோட நீங்க எல்லாரும் என்னோட, அரசியலோட கனெக்டராக இருக்கீங்க என்பது ரொம்ப தெளிவா தெரியுது. அதனால எனக்கு அது போதும். அதனால் தான் எதிரிகள் யாருன்னு சொல்லிட்டு களத்துக்கு வந்து இருக்கிறோம். ஆனால். அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள் யாரு? இப்போ இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். சும்மா களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்கிற ஐடியா எல்லாம் இல்ல'' எனப் பேசினார்.
